மகாகனமும் மடியிலுள்ள கனமும்

இந்தியாவில் நடுத்தர வர்க்கம் என்று பொத்தாம்பொதுவாக குறிக்கப்படும் மக்களைப் பொறுத்தவரை நீதிபதிகள், குறிப்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள், அலகிலா புனிதத்தன்மை கொண்டவர்கள். மகாகனம் பொருந்திய நீதிபதிகள் நெறி தவறுவதோ சுயநலத்துடன் செயல்படுவதோ நினைத்துப் பார்க்கக்கூட முடியாத ஒன்று. பெரும்பாலானவர்கள் நேர்மையற்றவர்களாகவும், சுயலாபத்திற்காக விதிகளையும் அறநெறிகளையும் மீறத் தயங்காதவர்களாகவும் இருக்கும் ஒரு நாட்டில் நீதிபதிகள் மட்டும் களங்கமற்றவர்களாக இருப்பார்கள் என்று நம்புவதிலுள்ள அபத்தத்தை சுட்டுவதாக சில அண்மைய நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன் வரை இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி ஒய். கே. சபர்வாலை எளிதில் மறந்துவிடமுடியாது. பாராளுமன்ற ஒப்புதல் அளிக்கப்பட்ட அரசின் இடஒதுக்கீடு கொள்கைகளுக்கு எதிரான சில முக்கியமான சர்ச்சைக்குள்ளான தீர்ப்புகள் இவரது தலைமையிலான நீதிபதிகள் குழுக்களால் வழங்கப்பட்டன. குறிப்பாக கிழே உள்ள இரண்டு வழக்குகளில் உச்சநீதிமன்றம் தன் அதிகார எல்லையைத் தாண்டி செயல்பட்டிருக்கிறது என்று பல்வேறு சட்ட வல்லுனர்களும் ஓய்வுபெற்ற நீதிபதிகளும் தெரிவித்திருக்கிறார்கள்.

1. தலித் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டிலிருந்து "க்ரீமி லேயர்" எனப்படும் "முன்னேறிய" பிரிவினரை விலக்கவேண்டும் என்னும் தீர்ப்பு. இது பற்றிய சட்ட வல்லுனர்களின் கருத்து இங்கே.

2. தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு சட்டம் உட்பட பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினரின் ஒப்புதலுடன் அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இணைக்கப்பட்ட சட்டங்களை ஆராய்ந்து ரத்து செய்யும் உரிமை உச்சநீதிமன்றத்துக்கு உண்டு என்னும் முக்கியமான தீர்ப்பு. இது பற்றிய ஒரு விமரிசனப் பார்வை இங்கே.

இந்த தீர்ப்புகளை விமரிசித்து என் பழைய பதிவொன்றில் சில கருத்துக்களை எழுதியிருந்தேன். அவற்றைப் படித்த சட்ட "அறிஞர்" ஒருவர் கோபத்துடன் எதிர்வினையாற்றியது மட்டுமல்லாமல் இப்படி தீர்ப்புகளையும் நீதிபதிகளையும் விமரிசிக்கும் தமிழ் வலைப்பதிவர்களை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உள்ளே தள்ளுவதற்கான வழிமுறைகளைக் கேட்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேசபக்தர்கள் சிலருக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கிய கூத்தெல்லாம் நடந்தேறியது.

கடந்த சில நாட்களாக நீதிபதி சபர்வாலின் பெயர் மீண்டும் செய்திகளில் அடிபடுகிறது. ஆனால் இம்முறை இடஒதுக்கீட்டுக்கு எதிரான "மைல்கல்" தீர்ப்பு எதையும் வழங்கியதற்காக அல்ல. மாறாக அவர் மீது சில கடுமையானக் குற்றச்சாட்டுகளை தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்ட மிட்-டே நாளிதழின் நான்கு செய்தியாளர்களுக்கு நீதிமன்றத்தை அவமதித்தக் குற்றத்துக்காக நான்கு மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருப்பதால். நீதிபதி சபர்வால் மீது எழுப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் கீழே. (மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் மற்றும் அருந்ததி ராய் ஆகியோர் அவுட்லுக் தளத்தில் எழுதியிருக்கும் கட்டுரைகளின் அடிப்படையில் எழுதுகிறேன்.)

1. ஆடை ஏற்றுமதி வணிகம் செய்துவந்த நீதிபதி சபர்வாலின் இரண்டு மகன்கள் 2004-ம் ஆண்டு இறுதியில் பெரும் வணிகக் கட்டடங்கள் கட்டி விற்கும் 'ரியல் எஸ்டேட்' தொழிலில் முன்னணியில் இருந்த காபுல் சாவ்லா என்பவருடன் பங்குத்தாரராக இணைந்து அத்தொழிலில் ஈடுபட்டனர். இந்த காலகட்டத்தில் முறையான அனுமதி பெறாமல் டில்லியின் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பல ஆண்டுகளாக செயல்பட்டுக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கானக் கடைகளையும் தொழிலகங்களையும் மூடுவது குறித்த வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தின் முன் இருந்தது. அந்த வழக்கு தன் முன் நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதி சபர்வால் மார்ச் 2005-ல் உத்தரவிட்டார். அக்டோபர் 2005-ல் நீதிபதி சபர்வாலின் மகன்கள் வணிக மையங்கள் கட்டி விற்கும் தொழிலில் முன்னணியில் இருந்த மற்றொருவரான பகேரியா என்பவரை தங்கள் புது நிறுவனம் ஒன்றில் பங்குத்தாரராக இணைத்தார்கள். பிப்ரவரி 2006-ல் நீதிபதி சபர்வால் மேற்படி வழக்கில் அனுமதி பெறாத கடைகள் மற்றும் தொழிலகங்கள் இடிக்கப்பட/மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் உச்சநீதிமன்றம் இந்த ஆணையின் அமலாக்கத்தில் அசாதாரணமான அக்கறை எடுத்துக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் எதிர்ப்புக் காரணமாக தயக்கம் காட்டிய டில்லி அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தது. "சீலிங் டிரைவ்" என்று அழைக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் கடைகளையும் வருமானத்தையும் இழந்து கடும் பாதிப்புக்குள்ளானார்கள். இவர்களில் ஓரளவு வசதி உடையவர்கள் தங்கள் கடைகளை புதிதாகக் கட்டப்பட்ட வணிகமையங்களுக்கு மாற்ற விரைந்ததால் அத்தகைய மையங்களில் இடத்தின் விலை பலமடங்கு அதிகமானது. இதன் காரணமாக நீதிபதி சபர்வாலின் மகன்களின் பொருளாதார நிலையும் பலமடங்கு உயர்ந்தது. 2004-ல் வெறும் ஒரு லட்சம் ருபாய் என்று மதிப்பிடப்பட்ட அவர்களது நிறுவனத்தின் பங்கு மூலதனம் 2006-ல் முன்னூறு மடங்கு அதிகரித்தது. தற்போது அந்த நிறுவனம் நொய்டாவில் 56 கோடி ருபாய் மதிப்பில் ஒரு தகவல் தொழில்நுட்ப வணிக மையத்தை (IT Mall) கட்டி வருகிறது.

2. தான் வழங்கும் தீர்ப்பின் காரணமாகத் தன் மகன்கள் ஆதாயமடைய வாய்ப்பிருக்கிறது என்ற நிலையில் இந்த வழக்கு தனக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் கூட நீதிபதி சபர்வால் தன்னை அதிலிருந்து விடுவித்துக் கொண்டிருப்பதே முறை. ஆனால் அவரோ தானாகவே இந்த வழக்கைக் கேட்டுப் பெற்றுக் கொண்டிருக்கிறார். (அப்போது தலைமை நீதிபதி ஆகியிராத அவருக்கு அப்படி தானாக வழக்கைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இருக்கவில்லை என்பது கூடுதல் செய்தி.)

3. குடியிருப்புப் பகுதிகளிலிருந்து செயல்பட்டதற்காக ஏராளமானவர்களின் கடைகளை மூட உத்தரவிட்டு அவர்களது வாழ்வாதாரங்களை இழக்க வைத்த நீதிபதி சபர்வாலின் மகன்களது நிறுவனங்கள் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தை பதிவுசெய்யப்பட்ட அலுவலகமாகக் கொண்டு செயல்பட்டு வந்தன.

4. நீதிபதி சபர்வாலின் மகன்களின் நிறுவனத்திற்கு இந்திய யூனியன் வங்கி எவ்வித உண்மையான பாதுகாப்பு உத்தரவாதங்களும் இல்லாமல் 28 கோடி ருபாய் கடன் வழங்கியது.

5. எவ்வித முன் அனுபவமும் இல்லாத, ஒரு ருபாய்க்கு கூட வணிகம் செய்திராத (Nil turnover) இந்த நிறுவனத்துக்கு உத்தரபிரதேசத்தின் சமாஜ்வாதி அரசாங்கம் நொய்டாவில் மொத்தம் 24000 சதுர மீட்டர் அளவுள்ள மிகப் பெரிய மனைகளை மிகக் குறைந்த விலையில் ஒதுக்கியிருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் நீதிபதி சபர்வால் சமாஜ்வாதி தலைவர் அமர் சிங்குக்கும் இந்தி நடிகைகள் உள்ளிட்ட பலருக்கும் இடையே நடந்த உரையாடல்களின் ஒலிநாடாக்களை ஊடகங்கள் வெளியிட தடை விதித்து அந்த வழக்கை விசாரித்து வந்தார்.

6. இந்த ஆண்டு மார்ச் மாதம் நீதிபதி சபர்வாலின் மகன்கள் டில்லியில் 15.46 கோடி ருபாய்க்கு ஒரு பெரிய வீட்டை வாங்கியிருக்கிறார்கள். இந்த பணம் எங்கிருந்து வந்தது என்பது விளக்கப்படவில்லை. மேலும் இந்த விற்பனை பத்திரத்தில் தாங்கள் நீதிபதி சபர்வாலின் மகன்கள் என்பதை மறைக்கும் விதமாக அவரது முழுப்பெயரைக் குறிப்பிடாமல் வெறுமனே யோகேஷ் குமார் என்று எழுதியிருக்கிறார்கள்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு உச்சநீதிமன்றத்தின் பக்தர்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்று தெரியவில்லை. நீதிபதியின் செயல்பாடுகள் பற்றிய விவாதத்தில் தேவையில்லாமல் அவரது மகன்களை இழுக்கும் நெறிப்பிறழ்வைக் யாராவது சுட்டிக்காட்டக் கூடும். வேறு சிலர் ஒரு தனிமனிதரின் தவறுக்காக ஒரு அமைப்பையே குறை சொல்வது தகுமோ முறையோ தர்மம்தானோ என்றெல்லாம் கேட்கலாம். ஆனால் ஒரு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மீது கடுமையான முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுவது இது முதன்முறையல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஆனந்த் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டும் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக அந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு நீதிமன்ற அவமதிப்புக்காக தண்டனை வழங்கப்பட்டது.

இந்தியாவில் நீதிபதிகள் மீது குற்றம் சுமத்துபவர்களுக்கு என்ன கதி நேரும் என்பது மிட்-டே செய்தியாளர்களுக்குத் தெரியாமல் இருக்காது. இருந்தும் அவர்கள் இந்த முறைகேடுகளை துணிந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் நீதிபதி சபர்வால் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளில் உள்ள ஒவ்வொரு வரிக்கும், ஒவ்வொரு தகவலுக்கும் அசைக்கமுடியாத, அதிகாரப்பூர்வமான ஆதாரங்கள் இருப்பது தான். ஆதாரங்களுடன் உண்மையை சொல்லும் ஒருவருக்கு நீதிமன்ற அவமதிப்புக்காக தண்டனை அளிக்க முடியாது என்பதையே தங்களது தற்காப்பு வாதமாக மிட்-டே செய்தியாளர்கள் வைத்திருக்கிறார்கள். நீதிபதி சபர்வால் மீதான இந்த குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படவேண்டும் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய குடிமக்கள் பலரும் தெரிவித்திருக்கிறார்கள்.

****

என்னைப் பொறுத்தவரை தன் குடும்பம் பொருளாதார ரீதியாக ஆதாயம் பெறும்வகையில் நீதிபதி சபர்வால் வழங்கியதாக சொல்லப்படும் தீர்ப்புக்கள் மட்டுமல்லாது இடஒதுக்கீட்டுக்கு எதிராக அவர் வழங்கிய தீர்ப்புக்களும் மறு ஆய்வு செய்யப்படவேண்டியவையே. அண்மைக்காலமாக இடஒதுக்கீட்டுடன் தொடர்புடைய பல்வேறு வழக்குகளின் போது சில நீதிபதிகள் தெரிவித்தக் கருத்துக்களிலிருந்து அவர்கள் சித்தாந்த அடிப்படையில் இடஒதுக்கீட்டின் தீவிர எதிர்ப்பாளர்களே என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. இதில் வியப்படைய ஏதுமில்லை. வட இந்திய 'உயர்'குடியினருக்கு இட ஒதுக்கீட்டின் மீதும் அதனால் பயன்பெறுவோர் மீதும் எந்த அளவுக்கு இழிவான எண்ணமும் காழ்ப்பும் இருக்கிறது என்று அறியவேண்டுமானால் ரீடிஃப்.காம் போன்ற தளங்களில் இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்களில் வட இந்திய 'துவிஜன்' பையன்கள் எழுதும் வசைகளைக் கொஞ்சம் படித்துப்பாருங்கள்.

சமூக நீதி குறித்த புரிதலில் வடமாநிலங்களுக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு இருப்பது வெளிப்படை. பல வரலாற்றுக் காரணங்களால் தென்னிந்தியர்களில் பெரும்பாலானவர்கள் இடஒதுக்கீட்டின் நன்மைகளை உணர்ந்திருக்கிறார்கள். தான், தன் சுற்றம் என்ற வட்டத்தைத் தாண்டி சிந்திக்க இயலாத சிலரைத் தவிர்த்துவிட்டு நோக்கினால் இடஒதுக்கீட்டினால் பாதிப்படையக்கூடிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கூட தீவிர இடஒதுக்கீடு ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு தமிழ் இணையத்திலிருந்தே பல எடுத்துக்காட்டுக்களை சொல்லமுடியும். உச்சநீதிமன்ற நீதிபதிகளிடையேயும் இந்த வேறுபாட்டைக் காண முடிகிறது. மண்டல் கமிஷன் வழக்கில் இடஒதுக்கீட்டின் தேவையை வலியுறுத்தும் உறுதியானக் கருத்துக்களுடன் தீர்ப்பெழுதிய நீதிபதி ரத்னவேல் பாண்டியன் உட்பட தென்னிந்திய நீதிபதிகள் எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருப்பினும் சமூக நீதிக்கு ஆதரவான நிலைபாடுகளையே எடுத்து வந்திருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் முதன்முறையாக உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக சில கருத்துக்களைத் தெரிவித்த இந்த செய்தியைப் பார்த்தால் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவில் இருந்த இரண்டு தென்னக நீதிபதிகள் மட்டுமே அக்கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள் என்பதைக் காணலாம். குறிப்பாக "Should the government wait for years and years before the exercise of identification of OBCs is completed?" என்ற நீதிபதி ரவீந்திரனின் கேள்வியுடன் "You waited for 57 years, why not 6 more months?" என்ற நீதிபதி அரிஜித் பசாயத்தின் கேள்வியை பொருத்திப்பாருங்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் அரசியல்/சித்தாந்த சாய்வுகள் உண்டு எனபதையும் அந்த சாய்வுகள் அவர்கள் எடுக்கும் முடிவுகளை பாதிக்கவல்லவை என்பதையும் மூடிமறைப்பது முட்டாள்தனம். இதன் காரணமாகத் தான் அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்படும் நீதிபதிகளின் பின்னணி, கடந்த காலங்களில் முக்கியமான பிரச்சனைகளில் எடுத்த நிலைபாடுகள், முன்னர் நீதிபதியாக பணியாற்றியபோது வழங்கியத் தீர்ப்புகள் என்று அனைத்தும் அலசி ஆராயப்பட்ட பின்பே செனட் அவர்களது நியமனத்தை உறுதிப்படுத்தவோ நிராகரிக்கவோ செய்கிறது. அமெரிக்க அதிபரின் கட்சிக்கு செனட்டில் பெரும்பான்மை இருந்தும் அவரால் நியமனம் செய்யப்பட்டவர்களின் சித்தாந்த சாய்வுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்ததால் அந்த நியமனங்கள் தோல்வி அடைந்திருக்கின்றன.

இந்திய உச்சநீதிமன்றத்தில் நலிந்த பிரிவினருக்கு உரிய பிரதிநித்துவம் வழங்கப்படாமல் இருப்பதும் சீர்செய்யவேண்டிய ஒன்று. தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கும் இருபத்திரண்டு பேரில் ஒரு பெண் கூட இல்லை. ஒருவர் மட்டுமே இஸ்லாமியர். சுதந்திரத்துக்கு பின்னான முதல் ஐம்பது ஆண்டுகளில் மூன்று தலித் நீதிபதிகள் மட்டுமே உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தகுதியானவர்கள் பலர் இருந்தும் வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்படுவது குறித்த தன் வேதனையை முன்னாள் குடியரசுத் தலைவர் நாராயணன் அழுத்தமாக வெளிப்படுத்திய பிறகே தற்போதைய தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் பரிந்துரைக்கப்பட்டார். பரிந்துரைக்கப்பட்ட பிறகும் கூட அவரது தேர்வுக்கு அப்போதைய தலைமை நீதிபதி ஆனந்த உட்பட பலரால் முட்டுக்கட்டை இடப்பட்டது.

நீதித்துறையில் சமூகநீதி குறித்து ஃபிரண்ட்லைன் இதழில் வி. வெங்கடேசன் இப்படி எழுதுகிறார்: "As the judiciary becomes over-protective of its powers vis-a-vis the executive, the nature of its social base causes concern." அண்மைக்காலமாக இடஒதுக்கீடு குறித்த பல்வேறு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் குழுக்களில் கிட்டத்தட்ட முழுமையாக 'உயர்'சாதி நீதிபதிகளே இருந்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு சட்டம் உள்ளிட்ட ஒன்பதாவது அட்டவணை சட்டங்களைப் பற்றிய வழக்கை விசாரித்த ஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழுவில் நான் அறிந்தவரை பிற்படுத்தப்பட்டவரோ தலித்தோ எவரும் இல்லை. தன் குடும்பம் ஆதாயம் பெறுவதற்காக ஒரு தலைமை நீதிபதி ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களை தெருவில் இறக்கினார் என்ற குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் முன்வைக்கப்படும் இவ்வேளையில் எனக்கு எழும் கேள்வி இதுதான். இப்படிப்பட்ட நீதிபதிகள் இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் எப்படி தங்கள் குடும்பம் மற்றும் சுற்றத்தின் நலன்களை கருதாமல் செயல்படுவார்கள்?

*****

எனக்குத் தெரிந்தவரை ஒரு ஜனநாயக நாட்டில் சட்டங்களை உருவாக்குவது மக்கள் பிரதிநிதிகளின் மன்றமாகிய பாராளுமன்றத்தின் பணி. சட்டங்களை அமல்படுத்துவது அரசாங்கத்தின் பணி. சட்டங்களை ஆராய்ந்து, எது சட்டப்படி சரி, எது சட்டப்படி தவறு என்று தீர்மானிப்பது நீதிமன்றங்களின் பணி. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்திய உச்சநீதிமன்றம் பாராளுமன்றம், அரசாங்கம் ஆகியவற்றின் பணிகளையும், அதிகாரங்களையும் தனதாக்கிக் கொள்வதையே தன் முழுநேரப் பணியாகக் கொண்டுள்ளது.

புதிய சட்டங்களை இயற்றவோ, சட்டங்களில் திருத்தம் செய்யவோ அறவே அதிகாரம் இல்லாத உச்சநீதிமன்றம் அந்த வேலைகளை மறைமுகமாக செய்து வருகிறது. எடுத்துக்காட்டாக உச்சநீதிமன்றம் தானாகவே உருவாக்கி அரசாங்கத்தின் மீது திணிக்கும் "க்ரீமி லேயர்", "50% உச்சவரம்பு" ஆகியவற்றுக்கு அரசமைப்பு சட்டத்தில் எவ்வித அடிப்படையும் இல்லை என்று பல சட்ட வல்லுனர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இப்படி அரசமைப்புச் சட்டத்தில் இல்லாதவற்றை உருவாக்கும் அதே வேளையில் அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கனவே இருக்கும் ஒன்பதாவது அட்டவணைச் சட்டங்களை ரத்து செய்யும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு உண்டு என்னும் "மைல்கல்" தீர்ப்பை நீதிபதி சபர்வால் வழங்கிச்சென்றிருக்கிறார். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்படாத, யாராலும் விமரிசிக்க முடியாத (மீறி விமரிசித்த அருந்ததி ராய் போன்றவர்களை சிறையில் அடைக்கத் தயங்காத) ஒன்பது நீதிபதிகள் ஆய்வு செய்து தங்களுக்கு ஒவ்வாததை நிராகரிக்கலாம் என்றால் பின் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று பீற்றுவதில் என்ன அர்த்தம் இருக்கமுடியும்? இந்த இடத்தில் சில மேதாவிகள் நாளைக்கு பாராளுமன்றம் அத்தனை பேரும் மொட்டைபோடவேண்டும் என்று சட்டம் இயற்றிவிட்டால் என்ன செய்வது என்றெல்லாம் கிலியூட்டுவார்கள். கவலை வேண்டாம். ஜனநாயக நாட்டில் அராஜகச் சட்டங்களைத் திரும்பப்பெற வைப்பது எப்படி என்று மக்களுக்குத் தெரியும். ஜெயலலிதாவின் கிடாவெட்டுச் சட்டத்தையும் மதமாற்றத் தடை சட்டத்தையும் தூக்கியெறிய தமிழக மக்களுக்கு ஒரு தேர்தல் தான் தேவைப்பட்டது.

இந்த அத்துமீறலை உச்சநீதிமன்றம் நியாயப்படுத்தியிருக்கும் விதம் சுவாரசியமானது. அதாவது ஒன்பதாவது அட்டவணையில் உள்ள சட்டங்கள் ஏதாவது அடிப்படை உரிமையை மீறியிருந்தால் அவை ரத்து செய்யப்படுமாம். பெரும்பாலான சட்டங்களும் அரசின் முற்போக்கு நடவடிக்கைகளும் சிலருடைய அடிப்படை உரிமையை மீறுவதாக காட்டமுடியும். எடுத்துக்காட்டாக இடஒதுக்கீடு 'உயர்'சாதியினரின் சமத்துவமாக பாகுபாடின்றி நடத்தப்படுவதற்கான அடிப்படை உரிமையை (fundamental right to equality and non-discrimination) மீறுவதாகச் சொல்லலாம். இவற்றில் எந்த வகையான உரிமைகளைக் காப்பாற்றுவது, எவற்றை கண்டுக்கொள்ளாமல் விடுவது என்று முடிவு செய்யும் உரிமை உச்சநீதிமன்றத்திடம் இருக்கிறது. நர்மதா அணைக்காக குருவிக்கூட்டை பிய்த்து எறிவது போல் லட்சக்கணக்கான பழங்குடி மக்களின் வாழ்விடங்களை சிதைப்பதை தடுக்க கோரும் மனுவை நிராகரிக்கும் உச்சநீதிமன்றம் தான் வேறு சிலரின் மத நம்பிக்கைகளைக் காப்பாற்ற கால்வாய் திட்டத்திற்கு தடை விதிக்கிறது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் (பெரும்பாலும் அடித்தட்டு கிராம மக்கள்) உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் உரிமையை சில மாநிலங்கள் சட்டம் இயற்றிப் பறித்தபோது "தேசநலன்" கருதி உருவாக்கப்பட்ட அந்த சட்டம் எந்த அடிப்படை உரிமையையும் மீறவில்லை என்று தீர்ப்பளிக்கும் அதே நீதிமன்றம் தான் உயர்கல்வி நிறுவனங்களில் நீக்கமற நிறைந்திருப்பதற்கான உயர்சாதியினரின் "உரிமை"யைக் காப்பாற்றுகிறது.

இந்திய உச்சநீதிமன்றம் படித்த நகர்புற நடுத்தரவர்க்கத்தினர், மேட்டுக்குடியினர், 'உயர்'சாதியினர் ஆகியோரின் நலன்களைப் பாதுகாப்பதும், மற்றவர்களின் அடிப்படை உரிமைகளை அடித்து நொறுக்குவதும் கண் இருப்பவர்கள் அனைவரும் காணக்கூடியதாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களிடம் இருக்கும் ஒரே ஆயுதமான ஓட்டுச்சீட்டைப் பயன்படுத்தி தங்களுக்கு சாதகமான அரசுகளை ஏற்படுத்த முயல்வதை "வாக்கு வங்கி அரசியல்" என்றுத் தூற்றுகிறார்கள் காலங்காலமாக தங்கள் நலனையே தேசநலனாக முன்னிறுத்திப் பழகிவிட்டக் கனவான்கள். அப்படிப்பட்ட அரசுகளின் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பறித்துக்கொள்வதை ஆதரித்து ஊக்குவிப்பதும் இவர்கள் தான்.

பொதுக் கொள்கை வகுப்பது அரசாங்கத்தின் வேலை என்றிருந்த நிலை மாறி இன்று பொதுக் கொள்கைகள் குறித்தும், அரசுத் திட்டங்கள் குறித்தும் இறுதி முடிவெடுக்கும் அதிகார மையமாக உச்சநீதிமன்றம் உருவாகியிருக்கிறது. சாலைகள் விரிவாக்கம், குடிசைப்பகுதிகளை அகற்றுதல், கடைகளை இழுத்து மூடுதல், சுற்றுச்சூழல் திட்டங்கள், நுழைவுத்தேர்வு நடத்துதல், பாடப்புத்தகங்களின் உள்ளடக்கத்தைத் தீர்மானித்தல் என்று எல்லாவற்றிலும் உச்சநீதிமன்றத்தின் இறுதி முடிவே அமல்படுத்தப்படுகிறது. இந்தப் போக்கின் பரிணாம வளர்ச்சியாகத் தான் நேற்று யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்படாத ஒரு நீதிபதி கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசைக் கலைத்துவிடுவேன் என்று மலைக்கவைக்கும் ஆணவத்துடன் எச்சரித்திருக்கிறார். ஒத்துழையாமை இயக்கமும், சத்தியாகிரகமும் நடத்திப் பெறப்பட்ட "சுதந்திரம்" இன்னும் இருப்பதாகச் சொல்லப்படும் ஒரு நாட்டில் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பவர்கள் "நெருப்போடு விளையாடாதே" என்று மிரட்டப்படுகிறார்கள். அருந்ததி ராய் தன் கட்டுரையில் எழுதியிருப்பது போல நமக்கு ஒத்துக்கொள்வதற்கு கடினமாக இருந்தாலும் நாம் தற்போது ஒருவித நீதிமன்ற சர்வாதிகாரத்தின் கீழ் வாழ்கிறோம் என்பதே உண்மை.

36 மறுமொழிகள்:

மிகச் சிறந்த கட்டுரை. விரைவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வாழ்த்துகின்றேன் :-)

அருமையான பதிவு!

இந்த கட்டுரைக்கு பார்ப்பனர்களின் நியாயமான பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.குறிப்பாக என்றென்றும் அன்புடன் பாலா, பினாத்தல் சுரேஷ், முகமூடி ஆகியோரும் டோண்டு,உண்மைத்தமிழன் ஆகிய இரண்டாம் கட்ட பார்ப்பனர்களும் இதற்கு எதிர்வினையாற்றலாமே

சிறப்பான பதிவு ஜெகத். நீதிபதிகள் நியமனங்களிலிலும் இட ஒதுக்கீடு வேண்டும். ( பிற்படுத்தப்பட்டவன் வந்தால் நீதியின் தரம் குறையும் என்றால் முற்பட்டவன் நீதி தரத்துடன் இருந்தாதா என்பதை ஆராய வேண்டுமல்லவா???).பரவலான சமூக மக்களின் பிரதிநிதித்துவம் நீதிமன்றங்களில் இல்லாத போது அது அனைவருக்கும் சமமான நீதியை வழங்க இயலாது. தங்களுக்கெதிரான விமர்சனங்களை நீதிமன்ற அவமதிப்பு என்னும் கேடயத்தைக் கொண்டு தண்டித்து விட்டு தங்கள் சர்வாதிகாரப்போக்கையை நீதிபதிகள் காண்பிக்கின்றனர். முன்னாள் தலைமை நீதிபதியின் மீதான குற்றச்சாட்டுக்களும் கிடப்பில் போடப்படும்.

பாராளுமன்ற ஜனநாயகத்தை மீறியது அல்ல நீதிமன்றங்கள். நீதிபதிகளின் செயல்களும் கண்காணிப்புக்கு உள்ளாக்குவது மிகவும் அவசியம்.

நீதிமன்றங்களில் அரசு இயங்கவில்லை. அவை சட்டமன்ற, பாராளுமன்ற அமைப்பில்தான் இயங்குகின்றன. அதிகாரம் செலுத்த வேண்டுமென்றால் நீதிபதிகள் தங்கள் இடங்களைத்தான் மாற்றி கொள்ள வேண்டும். எல்லை தாண்டி உள்நுழையகூடாது.

ஜெயலலிதாவை பரிகாரம் தேடிக்கொள்ளச்சொன்ன நீதிமன்றம் இன்று உண்ணாவிரதப் போராட்டத்திற்காக கலைஞரின் ஆட்சியை கலைக்க துடிக்கிறது.

குலத்துக்கொரு நீதி!!!

//ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களிடம் இருக்கும் ஒரே ஆயுதமான ஓட்டுச்சீட்டைப் பயன்படுத்தி தங்களுக்கு சாதகமான அரசுகளை ஏற்படுத்த முயல்வதை "வாக்கு வங்கி அரசியல்" என்றுத் தூற்றுகிறார்கள் காலங்காலமாக தங்கள் நலனையே தேசநலனாக முன்னிறுத்திப் பழகிவிட்டக் கனவான்கள். அப்படிப்பட்ட அரசுகளின் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பறித்துக்கொள்வதை ஆதரித்து ஊக்குவிப்பதும் இவர்கள் தான்.//

சடாரென்று அதிர்வூட்டிய (அதிர்ச்சியல்ல) வார்த்தைகள்; சிந்திக்க வேண்டிய வரிகள்.

//இந்தியாவில் நடுத்தர வர்க்கம் என்று பொத்தாம்பொதுவாக குறிக்கப்படும் மக்களைப் பொறுத்தவரை நீதிபதிகள், குறிப்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள், அலகிலா புனிதத்தன்மை கொண்டவர்கள். மகாகனம் பொருந்திய நீதிபதிகள் நெறி தவறுவதோ சுயநலத்துடன் செயல்படுவதோ நினைத்துப் பார்க்கக்கூட முடியாத ஒன்று. பெரும்பாலானவர்கள் நேர்மையற்றவர்களாகவும், சுயலாபத்திற்காக விதிகளையும் அறநெறிகளையும் மீறத் தயங்காதவர்களாகவும் இருக்கும் ஒரு நாட்டில் நீதிபதிகள் மட்டும் களங்கமற்றவர்களாக இருப்பார்கள் என்று நம்புவதிலுள்ள அபத்தத்தை சுட்டுவதாக சில அண்மைய நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன.//

//...இந்தப் போக்கின் பரிணாம வளர்ச்சியாகத் தான் நேற்று யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்படாத ஒரு நீதிபதி கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசைக் கலைத்துவிடுவேன் என்று மலைக்கவைக்கும் ஆணவத்துடன் எச்சரித்திருக்கிறார். ஒத்துழையாமை இயக்கமும், சத்தியாகிரகமும் நடத்திப் பெறப்பட்ட "சுதந்திரம்" இன்னும் இருப்பதாகச் சொல்லப்படும் ஒரு நாட்டில் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பவர்கள் "நெருப்போடு விளையாடாதே" என்று மிரட்டப்படுகிறார்கள். அருந்ததி ராய் தன் கட்டுரையில் எழுதியிருப்பது போல நமக்கு ஒத்துக்கொள்வதற்கு கடினமாக இருந்தாலும் நாம் தற்போது ஒருவித நீதிமன்ற சர்வாதிகாரத்தின் கீழ் வாழ்கிறோம் என்பதே உண்மை.//

இடுகையின் ஆரம்பத்திலும், முடிவிலும் வரும் இந்த வார்த்தைகள் நீதிமன்றங்கள் / நீதிபதிகள் குறித்த ஒரு தெளிவை முன்வைக்கின்றன. நன்றி ஜெகத்

லஞ்சம் வாங்கிக்கொண்டு, எதில் கையெழுத்து போடுகிறோம் என்றே தெரியாமல் முன்னாள் ஜனாதிபதி கலாமுக்கே கைது உத்தரவு பிறப்பித்த புண்ணியவான்களெல்லாம் நீதியரசர்களாக இருந்திருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றம் வர வர தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. எதிலென்றால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏதும் நல்லது நடந்துவிடும் என்று. அதுவும் தமிழர்களென்றால் .... எரியும், எரிச்சலில் எழுந்து நின்று கொண்டு தீர்ப்புச் சொல்வார்கள். இன்று வரை தமிழகம் என்றால் குண்டி எரிவதற்கு காரணம் பெரியார்

அருண்மொழி, ஜோ, அனானிமஸ், முத்துக்குமரன், தங்கவேல், முபாரக்: வாசித்துக் கருத்துத் தெரிவித்தமைக்கு நன்றி.

வழக்கம் போல் உங்களிடமிருந்து தேவையான தகவல்களுடன் உச்ச நீதிமன்றத்தின் முகமூடியை விலக்கிக் காட்டும் பதிவு.

சேது சமுத்திரத்திட்டத்தைத் தொடர மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்து ஆளும் கூட்டணி கதவடைப்பை அறிவித்த போது எனக்கு எரிச்சலாக வந்தது. மத்தியில் கூட்டணி அரசிலிருந்து விலகுவோம் என்று சொல்லி காங்கிரசை நிர்ப்பந்திப்பதை விடுத்து கதவடைப்பு நடத்தி என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று தோன்றியது.

இப்பொழுது உச்ச நீதி மன்றத்தின் ஜனநாயக விரோதத் தீர்ப்பையும், அதற்காக நீதிமன்றம் செயலாற்றிய வேகத்தையும், தீர்ப்புடன் வெளியிடப்பட்ட திமிரான வார்த்தைகளையும் பார்க்கிற போது, ஏற்கனவே சமூக நீதிக்கெதிராகவும், நர்மதா திட்டத்தால் பாதிக்கப் பட்ட எளிய மக்களுக்கெதிராகவும் தீர்ப்பெழுதிய உச்ச நீதிமன்றம் இப்பொழுது இராமரை வைத்து அரசியல் புரியும் மத/மனுவாதக் குரங்குகளுக்கு ஆதரவாக நிற்பது தெளிவாகப் புரிகிறது.

இன்னும் நிறைய சொல்ல இருக்கிறது, நேரமில்லை.

//இந்த குற்றச்சாட்டுகளுக்கு உச்சநீதிமன்றத்தின் பக்தர்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்று தெரியவில்லை. நீதிபதியின் செயல்பாடுகள் பற்றிய விவாதத்தில் தேவையில்லாமல் அவரது மகன்களை இழுக்கும் நெறிப்பிறழ்வைக் யாராவது சுட்டிக்காட்டக் கூடும்.

வேறு சிலர் ஒரு தனிமனிதரின் தவறுக்காக ஒரு அமைப்பையே குறை சொல்வது தகுமோ முறையோ தர்மம்தானோ என்றெல்லாம் கேட்கலாம்.

இந்த இடத்தில் சில மேதாவிகள் நாளைக்கு பாராளுமன்றம் அத்தனை பேரும் மொட்டைபோடவேண்டும் என்று சட்டம் இயற்றிவிட்டால் என்ன செய்வது என்றெல்லாம் கிலியூட்டுவார்கள்.//

அறிஞர்கள், மாலன்கள், முகமூடிகள் உதிர்க்கப் போகும் முத்துக்களை இப்படி முன்னரே சொல்லி அவர்களின் பிழைப்பில் கை வைக்கிறீர்களே :-)

நன்றி - சொ. சங்கரபாண்டி

//"நெருப்போடு விளையாடாதே" என்று மிரட்டப்படுகிறார்கள்.//

பந்த் நடத்தக்கூடாது என்று தான் பிறப்பித்த உத்தரவு செல்லாக்காசாகி விட்ட நிலையில் நீதிபதி அனுமார்வாலுக்கு பைத்தியம் பிடித்து விட்டது.இந்தப் பைத்தியம் தெளிய நாடாளுமன்றம் மூலம் நடவடிகை எடுக்கக் கோரியுள்ளார் வீரமணி அவர்கள்.

அரசியல் கட்சிகள், அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் அதிகாரத்தினை ஒருவிதமாக காட்டினால், உச்ச நீதிமன்றம் பதிலடியாக தன் அதிகாரத்தினை இன்னொரு விதமாகக் காட்டுகிறது. ஒன்று அத்துமீறினால் இன்னொன்று அதே மொழியில் பதில் தருகிறது. நர்மதை வழக்கில் அரசுதானே திட்டத்தினை நிறைவேற்ற வேண்டும்
என்று பிடிவாதமாக இருந்தது.இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்கள் பழங்குடியினருக்கு ஆதரவாக இருந்தார்களா. ஏழைகள், பழங்குடியினர் போன்ற ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அரசும் இல்லை, உச்ச நீதிமன்றமும் இல்லை. அவர்களைப் பொருத்தவரை இரண்டும் ஒரே ஒடுக்கு முறை இயந்திரத்தின் இரண்டு கரங்கள். உங்களுக்கு ஒரு கரம் சில நன்மைகளை (இட ஒதுக்கீடு) செய்வதால் அதை எதிர்க்கும் இன்னொரு கரத்தினை நீங்கள் குறை கூறுகிறீர்கள். இரண்டாலும் ஒடுக்கப்படுவர்களின் குரல்களை இங்கு யாரும் கேட்பதும் இல்லை, ஆதரிப்பதும் இல்லை. மத்தியதர வர்க்கத்தின் இரண்டு பிரிவினருக்கு
இடையே நடக்கும் அதிகாரப் போராட்டம் இரண்டு யானைகள் மோதுவது போன்றது.
சிறு உயிரினங்கள் மிதிபடுவதைப் பற்றி யானைகளுக்கு என்ன கவலை.

நர்மதை திட்டம், 2 குழந்தைகளுக்கும் மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் திட்டம் இவை எல்லாமே சட்ட/பாராளுமன்ற ஒப்புதலுடன் செய்யப்பட்டவைதானே.உங்களுடைய பிரச்சினை இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இட ஒதுக்கீட்டிற்கு ஏன் தடை சொன்னது என்பதுதானே. அதையும் ஏற்றுக் கொண்டிருந்தால் உங்களுக்கு உச்ச நீதிமன்றம் குறித்து விமர்சனமே இருந்திருக்காது என்று நினைக்கிறேன். உங்களின் வர்க்க நலனுக்கு எதிராக அது இருப்பது உங்களுக்கு எரிச்சல் தருகிறது. அதனால்தான் இந்த நீண்ட பதிவுகள் என்று தோன்றுகிறது.

சங்கரபாண்டி, ஜாலிஜம்பர், அனானிமஸ்: வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

/*இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்கள் பழங்குடியினருக்கு ஆதரவாக இருந்தார்களா. ... இரண்டாலும் ஒடுக்கப்படுவர்களின் குரல்களை இங்கு யாரும் கேட்பதும் இல்லை, ஆதரிப்பதும் இல்லை.*/

இந்த கருத்துக்களுக்கு எவ்வித அடிப்படையும் இல்லை. நர்மதை பழங்குடியினருக்கு ஆதரவாக ஒரு பெரிய மக்கள் இயக்கம் செயல்படுவதும் அதில் மேதா பட்கர், பாபா ஆம்தே போன்ற பலரும் இணைந்து போராடுவதும் உண்மையிலேயே உங்களுக்குத் தெரியாதா?

/*நர்மதை திட்டம், 2 குழந்தைகளுக்கும் மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் திட்டம் இவை எல்லாமே சட்ட/பாராளுமன்ற ஒப்புதலுடன் செய்யப்பட்டவைதானே.*/

அரசுகளும் சட்ட/பாராளுமன்றங்களும் அநீதியான, அடக்குமுறை சட்டங்களை பலமுறை இயற்றியிருக்கின்றன. ஆனால் அவற்றைத் தூக்கி எறியும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. மக்களுடைய எதிர்ப்பின் காரணமாகத் திரும்பப்பெறப்பட்ட பொடா சட்டமும், கிடாவெட்டு தடை சட்டமும், மதமாற்ற தடை சட்டமும் இதற்கு எடுத்துக்காட்டுக்கள். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாற்ற ஏதேனும் வழி இருக்கிறதா? தீர்ப்பு எத்தனை பக்கசார்பானதாக இருந்தாலும் அதை யாரும் எதிர்க்கமுடியாது என்பதே உண்மை. எதிர்ப்பவர்கள் நீதிமன்ற அவமதிப்பு என்ற பேரில் சிறையில் அடைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

/*உங்களுடைய பிரச்சினை இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இட ஒதுக்கீட்டிற்கு ஏன் தடை சொன்னது என்பதுதானே. */

உச்சநீதிமன்றம் எல்லா வழக்குகளிலும் ஒரே அளவுகோலை பயன்படுத்துவதில்லை என்பதை சுட்டவே நர்மதை திட்டத்தையும் இரு குழந்தை சட்டத்தையும் குறிப்பிட்டேன். மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட்ட எந்த ஒரு சட்டத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்படாத உச்சநீதிமன்றத்திடம் இருக்கக்கூடாது என்பதே என் நிலைபாடு. அது மக்களுடைய அதிகாரம்.

மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்பட்ட எந்த ஒரு சட்டத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்படாத உச்சநீதிமன்றத்திடம் இருக்கக்கூடாது என்பதே என் நிலைபாடு. அது மக்களுடைய அதிகாரம்.

JJ would bring an act that would
enable her to dismiss govt. employees and assembly would pass it.she would fire them.According you court should not strike it down
or declare that as illegal. and what should govt. employees do.come to streets, get kicks and lathi charges,get arrested and wait till elections without going to court. and what happens if JJ
comes back to power again. they
and their families should suffer
silently.going by your logic this
is what would happen.

இந்த கருத்துக்களுக்கு எவ்வித அடிப்படையும் இல்லை. நர்மதை பழங்குடியினருக்கு ஆதரவாக ஒரு பெரிய மக்கள் இயக்கம் செயல்படுவதும் அதில் மேதா பட்கர், பாபா ஆம்தே போன்ற பலரும் இணைந்து போராடுவதும் உண்மையிலேயே உங்களுக்குத் தெரியாதா?

Which political party supported this.None.
ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாற்ற ஏதேனும் வழி இருக்கிறதா?
The govt. of the day can change the law/amend the
constitution.This is the usual
practice.

முக்கியமான ஒரு ஆளை விட்டுட்டீங்களே! நான்
சங்கராச்சாரியின் பக்தன் என்று அறிவித்த நீதிபதியை
மறக்கலாமா? இன்னும் எத்தனை பக்தர்கள் இந்த
வழக்கை விசாரித்தார்களோ?

தெளிவான இந்த கட்டுரைக்கு நன்றி!

ஜெகத், தமிழில் எழுதினால் படிக்க மாட்டீர்களோ? தமிழில் நான் இது குறித்து எழுதியவை...

நீதிமன்ற அவமதிப்பு - நீதிக்கு அவமரியாதை?
http://marchoflaw.blogspot.com/2007/09/blog-post_22.html

அப்சலும், க்ரீமி லேயரும்
http://marchoflaw.blogspot.com/2006/12/6.html

பிரபு, அனானிமஸ்: உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

/*ஜெகத், தமிழில் எழுதினால் படிக்க மாட்டீர்களோ?*/

நீங்கள் சுட்டியிருக்கும் இரண்டுப் பதிவுகளையும் முன்பே படித்திருக்கிறேன். "க்ரீமி லேயருக்கு சட்ட அடிப்படை இல்லை என்று சட்ட வல்லுனர்கள் தெரிவித்திருக்கிறார்கள்" என்று எழுதும் போது முன்னாள் நீதிபதி சுவாமியை மட்டுமல்லாமல் உங்களையும் நினைத்துக்கொண்டு தான் எழுதினேன் :-) அதுபோல நீதிபதி ரத்னவேல் பாண்டியன் பற்றிய வரியை எழுதும்போது அதுபோன்ற ஒரு கருத்தை நீங்கள் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது.

Anonymous: Arguing with hypothetical situations could be fun. Let me try too.

What if Advani becomes PM, nukes Karachi, and they retaliate by targeting Chennai? That would be catastrophic. So shall we pass the control of the nuclear button to the learned judges of the Supreme Court?

Satire apart, the range of fundamental rights is so broad that almost any action of the government (especially progressive ones) can be struck down by the courts on the basis of violation of the fundamental rights of some persons. If an epidemic breaks out and the government quarantines a large number of people suspected of having contracted the virus (as was done in some countries during SARs) they can claim that their right to liberty is infringed. If the government bans the display of religious symbols in schools (as in France) then the courts can strike it down saying the right to freely practice religion is violated.

To make matters worse, the courts do not adopt a uniform yardstick to determine the violation of fundamental rights.

To make matters even worse, the courts have absolutely no accountability. Despite widespread corruption, not a single judge has been impeached in the 60 years since independence.

Despite widespread corruption, not a single judge has been impeached in the 60 years since independence.
-----------------------------------
Mr.Jagath, you should know that an attempt was made in the early 90s to impeach a then sitting judge of the Supreme Court. Who took that initiative, who opposed that
and who supported the Judge and that too on what grounds- do you know the answers. You should also know the stand taken by different parties on this issue.

I think it is better you get some
understanding about the basics of
Indian Constitution and the functioning of the Supreme Court
over the years before making sweeping comments. It is better to start with some books than simply going by what gets written in Frontline.Reading the judgments
like the one given in Mandal Case
is also desirable. Except for Pandian all other judges were for excluding creamy layer.

Dear Sir

Very good post once again.

I want to make your post in the PDF format. But the option is not there in your blog. Please make it possible.

Regards
Gobi

The previous anonymous comment bears the 'signature' of "constitutional/legal expert" among Tamil bloggers (not the practicing advocate Rajadurai). The two examples he chose exposes not only him and also the dominance of Indian judiciary by Brahmin/Bania mafia.

1. Our leanered legal expert (LLE) is trying to remind us the impeachment proceedings against former SC Justice V. Ramaswamy. Tamil Nadu politicians, including K. Veeramani, opposed because he is a non-brahmin. LLE, you have told this several times before. Tell a different story, preferably invoving a Brahmin/Bania judges. You may get some help here:
http://www.judicialreforms.org/judicial_account.htm

2. //Reading the judgments
like the one given in Mandal Case
is also desirable. Except for Pandian all other judges were for excluding creamy layer.//

Speaking against Mandal is LLE's favorite passtime. That fact that "except for Pandian all other judges were for excluding creamy layer" speaks volumes about well entrenched B/B mafia in Indian judiciary. Social justice should start in the Supreme Court first.

Gobi and Anonymous: Thanks. I’ll try to fix the PDF problem soon

/*Who took that initiative, who opposed that and who supported the Judge*/

I know that the Congress and the ADMK protected Justice Ramaswamy although close to 200 MPs voted to impeach him. But the fact remains that no judge has been impeached until now. Besides, the Supreme Court is not blameless in this. Various Chief Justices allowed him to function as a judge even after the judicial enquiry committee set-up by the parliament found him guilty.

/*Except for Pandian all other judges were for excluding creamy layer.*/

That only proves my point that the social and political backgrounds of the judges do influence their judgments. All the more reason why there should be more judges from socially disadvantaged backgrounds in the Supreme Court.

/*I think it is better you get some understanding about the basics…It is better to start with some books*/

Instead of adopting such a pompous and patronizing attitude, you who have presumably read the books can point out if there are any statements in my post that are factually incorrect.

கோபி: தமிழ்மணத்தின் PDF மென்நூல் உருவாக்கும் சேவை புது பிளாகர் பதிவுகளுக்கு வேலை செய்வதாகத் தெரியவில்லை. சில வலைத்தளங்கள் மூலம் PDF கோப்புக்களை இலவசமாக உருவாக்க முடியும் என்று நினைக்கிறேன். Online pdf creator என்று கூகிளில் தேடினால் கிடைக்கக்கூடும்.

The previous anonymous comment bears the 'signature' of "constitutional/legal expert" among Tamil bloggers (not the practicing advocate Rajadurai). The two examples he chose exposes not only him and also the dominance of Indian judiciary by Brahmin/Bania mafia.

வலைப்பதிவுகளில்,தமிழில் எழுதுவதிலிருந்து விருப்ப ஒய்வு (தற்காலிக?) எடுத்துக் கொண்டவர் திண்ணையில் இப்போது அவ்வபோது எழுதுகிறார்.கடந்த வாரம் கூட புலம்பியிருக்கிறார், வன்முறை வன்முறை என்று. நீங்கள் சொல்லும் நபர் அவர்தானே?

The two examples he chose exposes not only him and also the dominance of Indian judiciary by Brahmin/Bania mafia.

அபச்சாரம், சுப்ரீம் கோர்ட் ஜட்ஜகளையெல்லாம் பத்தி இப்படியா பேசுவா, இதுக்கே உங்களையெல்லாம் கன்டெம்ப்ட் கேஸ் போட்டு உள்ள தள்ளணும்

எங்கேப்பா பதிலை காணோம்?

நல்ல கட்டுரை ஜெகத். உண்மையை உரத்து, தெளிவாகக் கூறியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

//பரவலான சமூக மக்களின் பிரதிநிதித்துவம் நீதிமன்றங்களில் இல்லாத போது அது அனைவருக்கும் சமமான நீதியை வழங்க இயலாது. //
முத்துகுமரனின் இந்த ஒரு கருத்திலிருந்து நான் வேறுபடுகிறேன். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பதும், நீதிமன்றங்களில் எவ்வித சார்புநிலையுமற்றவர்கள் மட்டுமே நடுநிலையோடு பணியாற்ற வேண்டும் என்பதும் இரு வேறு விஷயங்கள். இரண்டுக்கும் எப்படி தொடர்பு படுத்தமுடியும்? வழக்கில் சம்பந்தப் பட்டுள்ளவரின் ஜாதியைப் பொறுத்து எந்த ஜாதியைச் சேர்ந்த நீதிபதி வழக்குக்கு நியமிக்கப் படவேண்டுமென்றா சொல்வது?
1. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் மற்ற எல்லாத்துறையையும் போலவே நீதித்துறையிலும் இருக்க வேண்டும். அது சமூகநீதியை நிலைநிறுத்துவதற்கான நிலைப்பாடு மட்டுமே.
2. வழக்குகளில் பக்கச் சார்பின்றி நீதி வழங்குவதற்கு நீதிபதி நியமனத்திற்கான விதிமுறைகள் மாற்றப் படவேண்டும். ஜெகத் எடுத்துக்காட்டியிருப்பது போல் அமெரிக்க நீதிபதி நியமனத்திற்கான நடைமுறைகளைப் போன்ற ஒரு வெளிப்படையான அணுகுமுறை வேண்டும்.
இரண்டையும் தொடர்பு படுத்துதல் தவறான புரிதலுக்கு வழி வகுத்துவிடும்.

//வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பதும், நீதிமன்றங்களில் எவ்வித சார்புநிலையுமற்றவர்கள் மட்டுமே நடுநிலையோடு பணியாற்ற வேண்டும் என்பதும் இரு வேறு விஷயங்கள். இரண்டுக்கும் எப்படி தொடர்பு படுத்தமுடியும்? வழக்கில் சம்பந்தப் பட்டுள்ளவரின் ஜாதியைப் பொறுத்து எந்த ஜாதியைச் சேர்ந்த நீதிபதி வழக்குக்கு நியமிக்கப் படவேண்டுமென்றா சொல்வது?//

தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்கள் லஷ்மி. ஜாதியைப் பொறுத்து நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நீதிபதிகளின் நடுநிலமையை சாதியைப்பொறுத்து தீர்மானிக்ககூடாது என்னும் கருத்தை வரவேற்கும் நேரத்தில் அதை அனைவரிடமும் சமமாக பிரயோகிக்க வேண்டும் என்பதே என் கருத்து. ஆதிக்க சாதி நீதிபதிகளின் சார்புத்தன்மை எந்தவித கேள்விக்குள்ளாக்கபடாத நிலையில் மற்றவர்களிடம் அதை கேள்விக்குள்ளாக்குவது ஏன் என்பதுதான் என் கேள்வி.

ஏனென்றால் நீதிமன்றங்களில் சமூகநீதியை நிலைநாட்ட முனையும் எந்த முயற்சிகளையும் அது நீதியின் தன்மைக்கு பங்கம் விளைந்துவுடுவதாகவே தொடர்ந்து ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. அதை நோக்கிய விமர்சனமே என்னுடையது.
//இரண்டையும் தொடர்பு படுத்துதல் தவறான புரிதலுக்கு வழி வகுத்துவிடும்.//
இதை கொஞ்சம் விரிவாக விளக்கினால் நன்றாக இருக்கும். நான் பிரச்சனையின் ஒரு கோணத்தை மட்டும் பேசியிருக்கிறேன்.
பரவலான மக்களின் சமூக பிரதிநித்துவம் நீதிமன்றங்களில் வேண்டும் என்பது சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு மட்டுமல்ல. நீதியையும் நிலைநாட்டுவதற்கே. ஏனேனினில் ஒற்றை சாளர சட்டகத்தின் வழியே நீதி வழங்கப்படக்கூடாது. அது பரந்துபட்ட பார்வையை உள்ளடக்கி இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.

"I know that the Congress and the ADMK protected Justice Ramaswamy"

Tuglaq Editor Cho.Ramasamy campaigned for V.Ramasamy through his magazine.

V.Ramasamy's uncle Veerasamy former Chief Justice of Madras High Court is having a criminal case pending against him on corruption charges. However I am told that he was one of the best judges, Madras High Court had seen in the recent past.

Tuglaq Editor Cho.Ramasamy campaigned for V.Ramasamy through his magazine.


The MPs who brought the motion were from left parties.That made a lot of difference.

However I am told that he was one of the best judges, Madras High Court had seen in the recent past.

Some scales including time scale are relative :)

Appeal to over-rule 'Veerasamy judgment'
http://www.hinduonnet.com/2002/12/20/stories/2002122005271100.htm
By Our Legal Correspondent

NEW DELHI DEC. 19. The Committee on Judicial Accountability (CJA) has appealed to the Chief Justice of India (CJI), V.N. Khare, to suo motu consider and overrule the "Veerasamy judgment" and remove the requirement of prior permission of the CJI for registration of offences committed by members of the higher judiciary.

The CJA, comprising eminent lawyers, V.M. Tarkunde, Ram Jethmalani, Shanti Bhushan, Rajendra Sachar, D.S. Tewatia, Anil Divan, Indira Jaising, Kamini Jaiswal, Prashant Bhushan, Arvind Nigam and Hardev Singh, in a resolution said the judicial scandal that had surfaced in Punjab, Karnataka and Rajasthan had demonstrated that the "Veerasamy judgment" prohibited the registration of FIR and initiation of criminal proceedings against a judge without the CJI's prior permission.

In a resolution, the CJA said that despite several allegations of judicial misconduct amounting to criminal offences coming from various parts of the country against judges, "there has not been a single case where the CJI has himself asked the CBI or the police to investigate an offence against a judge".

The normal rule of law must prevail and the CJI should reconsider and overrule the above judgment. "If the Supreme Court fails to do this, the CJA would urge the Government and Parliament to enact suitable legislation to overrule this judgment," it said.

Referring to the issue of contempt notices against newspapers and journalists by the Karnataka High Court, the CJA said that "any allegation against a judge which is true or which has been made in good faith and on some reasonable basis, cannot be made the subject of a contempt action".

It said that exposing judicial corruption was in the public interest and this could not be done unless the law of contempt was appropriately reformed and amended and truth or good faith were made good defences in a contempt action.

The credibility of the judiciary and the faith of the ordinary people in the administration of justice were at stake. Unless urgent steps were taken to make the higher judiciary accountable, misconduct in judiciary and public disquiet about it were bound to increase.

Delaying justice


Sir, - About 15 years back Justice Veerasamy was serving as Chief Justice of the Madras High Court. At that time also Mr. Karunanidhi was the Chief Minister of Tamil Nadu. The CBI raided the house of Justice Veerasamy and recovered unaccounted cash and wealth. The CBI registered a case against him. On the advice of the President, the Chief Justice of the Madras High Court resigned his post. He filed a writ petition in the Supreme Court to quash the FIR registered against him under the Prevention of Corruption Act for possession of wealth disproportionate to the known sources of income. He took the stand that the Prevention of Corruption Act is not applicable to him as Chief Justice and that he has got constitutional immunity. After a couple of years' delay the Supreme Court dismissed his writ petition holding that the Prevention of Corruption Act is applicable even to the Chief Justice of a High Court.

The CBI after completing the investigation filed a chargesheet against him before a special court under the Prevention of Corruption Act. The trial of the case was further delayed with the judge moving the High Court on one or the other grounds. The High Court cleared all the petitions and paved the way for trial of the case. The trial has not commenced till today. It is not known what happened to the case. Probably everyone concerned wants to gain from the people's loss of memory due to lapse of time.

Justice Veerasamy must now be nearing 80. If the Indian Judiciary could not try its own judge speedily, what justification has it got to expedite the trial of the former Chief Minister, Ms. Jayalalitha and her erstwhile Cabinet Ministers under the same Prevention of Corruption Act and for the same offence. The Judiciary cannot have double standard, one for its own staff and the other for the personalities of the Executive and Legislative wings of the State. Will the Judiciary explain this anomaly? Will ever the trial of the former Chief Justice, Mr. Veerasamy, proceed and judgment in that case pronounced?

A. Gunasekaran,

Bhuvanagiri (TN)
http://www.hindu.com/thehindu/2000/11/08/stories/05081305.htm

I can give more, but so much for this uncle and nephew duo. Mr.Rajadurai, do you know the
details of the case against
Veerasamy. If you are based
in Madurai find out from your
colleagues and advocates of
yesteryears.Veersamy could not be
convicted despite evidence.Why, see the above news on the
'Veerasamy judgment' .

www.judicialreforms.org/files/background_paper_of_Convenion_on_Jud_Acc%20_26.7.03.pdf

வாங்கண்ணா, இத்தனை நாள் எங்கே போயிருந்தீர்கள்? எல்லாத்துக்கும் சேர்த்து இந்த ஒரு பதிவிலேயே பட்டையை கிளப்பிட்டீங்க.

நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

Speaking against Mandal is LLE's favorite passtime. That fact that "except for Pandian all other judges were for excluding creamy layer" speaks volumes about well entrenched B/B mafia in Indian judiciary. Social justice should start in the Supreme Court first.

Thanks for the discovery, that, Justices P.B.Sawant, Jeevan Reddy et.al were also part of B/B Mafia.

நல்ல அலசல்.
சென்ற வருடத்தில் தினமும் செய்தியில் அடிபட்டது '(டெல்லி) ஆக்கிரமிப்பாளர்களுக்கு உச்ச நீதி மன்றம் கெடு' என்பதே. இதனால் கடையடைப்பு, கலவரம், துப்பாக்கி சூடு எல்லாம் நடந்தது. தினமும் இதே செய்திகளால், ஏன் இவ்வளவு தீவிரம் உ.நீ.ம. க்கு வேறு வேலையே இல்லையா என்று அப்போது எரிச்சல் ஏற்பட்டது.
இப்போது புரிகிறது.
-விபின்

ஜெகத்,

மிகச் சிறந்த கட்டுரை.. பிரமிப்பூட்டுகிறது..

நன்றி
வசந்த்

இன்றைய ஹிந்துவிலிருந்து: ( http://www.hindu.com/2007/12/11/stories/2007121161191200.htm )

Don’t cross limits, apex court asks judges

Calling for judicial restraint, the Supreme Court has asked courts not to take over the functions of the legislature or the executive, saying there is a broad separation of powers under the Constitution and each organ of the state must have respect for others and should not encroach on their domain.

Blaming the Supreme Court itself for passing certain orders that resulted in upsetting the balance, a Bench consisting of Justices A.K. Mathur and Markandey Katju said in a judgment...

The Bench said: “We are compelled to make these observations because we are repeatedly coming across cases where judges are unjustifiably trying to perform executive or legislative functions. This is clearly unconstitutional. In the name of judicial activism, judges cannot cross their limits and try to take over functions which belong to another organ of the state.”

The Bench said: “Judges must know their limits and must not try to run the government. They must have modesty and humility, and not behave like emperors.”...

The Bench said: “The justification often given for judicial encroachment on the domain of the executive or the legislature is that the other two organs are not doing their jobs properly. Even assuming this is so, the same allegations can be made against the judiciary too because there are cases pending in courts for half-a-century.”...

The Bench said: “For instance, the orders passed by the Delhi High Court in recent times dealt with subjects ranging from age and other criteria for nursery admissions, unauthorised schools, criteria for free seats in schools, supply of drinking water in schools, number of free beds in hospitals, the kind of air Delhiites breathe, begging in public, use of subways, etc.”

These matters pertained “exclusively to the executive or legislative domain. If there is a law, judges can certainly enforce it, but judges cannot create a law and seek to enforce it. .... This is clearly illegal for, judges cannot legislate.”..

If the legislature or the executive was not functioning properly, it was for the people to correct the defects by exercising their franchise properly in the next elections and voting for candidates who would fulfil their expectations or by other lawful methods, e.g peaceful demonstrations...

If judges act like legislators or administrators, it follows that judges should be elected like legislators or selected and trained like administrators.”