பிளாகர்: தமிழில் நாளும் நேரமும்

நாளையும் நேரத்தையும் தமிழில் மாற்றுவது எப்படி என்று மணியன் கேட்டிருந்தார். உண்மையில், மாதத்தையும் கிழமையையும் தமிழில் மாற்றுவதற்கான நிரலை சிலப் பதிவர்கள் ஏற்கனவேப் பயன்படுத்தி வருகிறார்கள். நான் அதோடு நேரத்தில் AM/PM என்று இருப்பதை தமிழில் காலை/மதியம்/மாலை/இரவு என்று மாற்றுவதற்கான சில வரிகளையும் சேர்த்திருக்கிறேன். புது பிளாகரில் புது வார்ப்புருவுடன் பயன்படுத்தக்கூடிய இந்த நிரல் எப்படி செயல்படுகிறது என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள் கீழே:

1. நாள் காட்டும் இடத்தில் January அல்லது Jan என்று இருந்தால் அதை ஜனவரி என்றும், Sunday அல்லது Sun என்று இருந்தால் அதை ஞாயிறு என்றும் மாற்றிவிடும்.

2. நேரம் 3:15 PM என்றோ 08:45:00 PM என்றோ இருந்தால் அதை முறையே மதியம் 3:15 அல்லது இரவு 08:45:00 என்று மாற்றிவிடும். (குறிப்பு: உங்கள் பதிவில் நேரம் காட்டும் இடத்தில் AM, PM ஆகிய எழுத்துத்தொடர்கள் இல்லாவிட்டால் - 2:35 PM என்பது 14:35 என்று இருந்தால் - இந்த நிரல் அதை ஏதும் செய்யாமல் அப்படியே விட்டுவிடும். நேரம் காட்டப்படும் முறையை நீங்கள் உங்கள் Settings பக்கத்தின் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.)

நிரலை அப்படியேப் பயன்படுத்த விரும்புவோர் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும். ஏதாவது சிறப்பு மாற்றங்கள் செய்ய விரும்புபவர்கள் நிரல் துண்டை Notepad, Wordpad போன்ற ஒரு Text Editor-ல் வைத்து வேண்டிய மாற்றங்களைச் செய்தபின் வார்ப்புருவில் இடலாம். எடுத்துக்காட்டாக கீழே உள்ள மாற்றங்களை நீங்கள் செய்ய விரும்பலாம்.

(அ) மாதத்தையும் கிழமையையும் மட்டும் மாற்றிவிட்டு நேரத்தை அப்படியே விட்டுவிட நினைப்பவர்கள் நிரலில் <!-- Time starts --> என்னும் வரியிலிருந்து <!-- Time ends --> என்னும் வரி வரை உள்ளவற்றை அகற்றிவிடலாம்.

(ஆ) ஆங்கில மாதங்களை ஈழத்தமிழ் (யாழ்ப்பாணத் தமிழ்?) முறையில் எழுத விரும்புவோர் யூலை, ஒக்ரோபர் என்று வேண்டிய மாற்றங்களைச் செய்துக் கொள்ளலாம். (டகரமா ரகரமா என்றப் பட்டிமன்றத்தை மீண்டும் தொடங்கி அரைத்து அரைத்து விழுதான மாவை மறுபடியும் அரைக்க வேண்டாம் என்று அனைவரையும் கரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்.)

நீங்கள் செய்ய வேண்டியது:

1. வார்ப்புருவின் Edit HTML tab-க்கு செல்லுங்கள். மாற்றங்கள் செய்வதற்கு முன் வார்ப்புருவின் நகலை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி </HEAD> என்ற இடத்துக்கு மேலே ஒட்டுங்கள்.

<script>
<!-- Script by Jagad (http://kaiman-alavu.blogspot.com) -->
function tamilize(stg)
{
EList = new Array("Sunday", "Monday", "Tuesday", "Wednesday", "Thursday", "Friday", "Saturday", "January", "February", "March", "April", "May", "June", "July", "August", "September", "October", "November", "December");

EList2 = new Array("Sun", "Mon", "Tue", "Wed", "Thu", "Fri","Sat", "Jan", "Feb", "Mar", "Apr", "May", "Jun", "Jul", "Aug", "Sep", "Oct", "Nov", "Dec");

TList = new Array("ஞாயிறு", "திங்கள்", "செவ்வாய்", "புதன்", "வியாழன்", "வெள்ளி", "சனி", "ஜனவரி", "பிப்ரவரி", "மார்ச்", "ஏப்ரல்", "மே", "ஜூன்", "ஜூலை", "ஆகஸ்ட்", "செப்டம்பர்", "அக்டோபர்", "நவம்பர்", "டிசம்பர்");

<!-- Time starts -->
is_pm = 0;
is_am = 0;
has_ampm = 0;
hr_msd = 0;
hr_lsd = 0;
hr = 0;
dp = "";
blanko = "";
colonfound = 0;
i = 1;
while( i &lt; stg.length) {
if(stg.charCodeAt(i) == 77 &amp;&amp; stg.charCodeAt(i-1) == 80)
is_pm = 1;
if(stg.charCodeAt(i) == 77 &amp;&amp; stg.charCodeAt(i-1) == 65)
is_am = 1;
if(stg.charCodeAt(i) == 58 &amp;&amp; colonfound == 0){
colonfound = 1;
hr_lsd = stg.charCodeAt(i-1)-48;
if(i &gt;= 2 &amp;&amp; stg.charCodeAt(i-2) != 32) {
hr_msd = stg.charCodeAt(i-2)-48;
start_pos = i - 2;}
else {
start_pos = i - 1;}
hr = hr_msd*10 + hr_lsd;
if(stg.charCodeAt(i+3) == 58)
end_pos = i + 5;
else
end_pos = i + 2;}
i++;}
has_ampm = is_am + is_pm;
if (has_ampm == 1){
if (is_pm == 0){
if (hr == 12)
{dp = "இரவு ";}
else if (hr &gt;= 4)
{dp = "காலை ";}
else
{dp = "இரவு ";}
stg = stg.replace("AM", blanko);}
else {
if (hr == 12)
{dp = "மதியம் ";}
else if (hr &gt;= 8)
{dp = "இரவு ";}
else if (hr &gt;= 4)
{dp = "மாலை ";}
else
{dp = "மதியம் ";}
stg = stg.replace("PM", blanko);}
slice = stg.substring(start_pos,end_pos);
dp = dp + slice;
stg = stg.replace(slice,dp);}
<!-- Time ends -->

for (i=0;i &lt; 19;i++){
stg = stg.replace(EList[i], TList[i]);
stg = stg.replace(EList2[i], TList[i]);}
return stg;
}
</script>


2. வார்ப்புருவில் <data:post.dateHeader/> என்று இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அதை அகற்றிவிட்டு கீழே உள்ளதை இடுங்கள்.

<script>document.write(tamilize('<data:post.dateHeader/>'))</script>

3. <data:post.timestamp/> என்று எங்காவது இருக்கிறதா என்றுப் பாருங்கள். (சிலருக்கு இருக்காது.) இருந்தால் அதைக் கீழே உள்ளவாறு மாற்றுங்கள்.

<script>document.write(tamilize('<data:post.timestamp/>'))</script>

4. வார்ப்புருவில் <data:comment.timestamp/> என்று இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அதை அகற்றிவிட்டு கீழே உள்ளதை இடுங்கள்.

<script>document.write(tamilize('<data:comment.timestamp/>'))</script>

5. வார்ப்புருவில் <data:i.name/> என்று எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அதைக் கீழே உள்ளவாறு மாற்றுங்கள். (சிலருக்கு இருக்காது. மற்றவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருக்கக்கூடும்.)

<script>document.write(tamilize('<data:i.name/>'))</script>

6. வார்ப்புருவைச் சேமியுங்கள்.

இப்போது மாதம், கிழமை, நேரம் எல்லாம் தமிழில் தெரியும். பதிவில் ஒற்றை ஆங்கில எழுத்தைக் கூட சகித்துக் கொள்ளமுடியாத தனித்தமிழ் வெறியர் என்று உங்களை யாராவது நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல :-)

34 மறுமொழிகள்:

ஜெகத், மிகவும் பயனானது. அதனோடு, மேலே உங்கள் பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பயன்படுத்துகினவர்கள் அதையும் சேர்த்துப் பயன்படுத்தினால், உங்களுக்குரிய பங்களிப்பு நிற்கும்.

ஜெகத்,

/* நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? */

பாராட்டுக்கள்/வாழ்த்துக்கள்/நன்றிகள்.
உங்களின் இம் முயற்சியால் பலரும் பயன்பெறுவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

பெயரிலி, நன்றி. நீங்கள் சொல்லியபடி செய்துவிட்டேன்.

வெற்றி, நன்றி.

கேட்டேன்,கொடுக்கப் பட்டது. நன்றிகள் பல.
உங்கள் முயற்சிக்கும் ஆர்வத்திற்கும் பாராட்டுக்கள்!!

தனி தமிழ் வெறி யன் என்று சொல்பவர்கள் சொல்லட்டும் . உங்கள் உதவிக்கு நன்றி

இந்த வார்ப்புருவில் விழுந்து புரண்டு எழுந்திருக்கவைத்து விட்டீர்களே!!!
ஏதோ பிழைச்செய்தி வருகிறது.
பொருமையாக பிறகு பார்க்கிறேன்.

வார்ப்புருவில் மாற்றங்கள் செய்யும் முன் அதன் நகலைச் சேமித்து வைத்துக் கொள்ளுமாறு மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொள்கிறேன். ஏதாவது தவறு நடந்தால் அதை upload செய்து பழைய நிலைக்குத் திரும்பலாம். <>

அட்டகாசமாக மாறிடிச்சு.
நன்றி ஜெகத்.
மேலும் ஒரு வேண்டுகோள்!!
இந்த வார்ப்புருவை பிச்சி பிடுங்கி எதை எங்கு என்ன செய்தால் என்ன விளைவு வரும் என்று எழுதினால்,என்னை மாதிரி ஆளுங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

வாழ்த்துக்கள் ஜெகத்.. அருமையாக வேலை செய்கிறது!!:))

பொன்ஸ்,

உங்கள் பதிவில் பின்னூட்டங்களில் நேரம் காட்டப்படாததைக் கவனித்தீர்களா? உங்கள் பக்கத்தின் மீயுரையைப் பார்த்ததில் <data:comment.timestamp/> என்ற tag சரியாக மாற்றப்படவில்லை என்றுத் தெரிகிறது. இப்படி இருக்கவேண்டும்:

<script>document.write(tamilize('<data:comment.timestamp/>'))</script>

வடுவூர் குமார்,

எனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் நிச்சயம் இங்கேப் பகிர்ந்துக் கொள்கிறேன். உங்கள் பதிவில் <data:post.timestamp/> என்ற tag மட்டும் மாற்றப்படவில்லை போலிருக்கிறது.

நன்றி ஜெகத். மாற்றியபின் சரியாக வருகிறது.

புது ப்ளாக்கரில் பின்னூட்டங்களைத் திருத்துவதற்கு என்ன வழி என்று ஏதும் கண்டறிந்திருக்கிறீர்களா?

நான் என்ன நினைக்கிறது???

அடிச்சு ஆடுறீங்க... கலக்குங்க... இது மாதிரி நிறைய நுட்ப வல்லூனர்கள் தேவை.

வாழ்த்துக்கள் தலை!

மீண்டும் நன்றி ஜெகத். எனது மணிமலர்2.0 பதிவில் பாவித்துள்ளேன். நன்றாக வேலை செய்கிறது.

வார்ப்புருவில் மாற்றங்கள் செய்வதுக் குறித்துக் கேட்டிருந்த சில நண்பர்களுக்குப் பதிலளிப்பதாகச் சொல்லியிருந்தேன். மற்ற வேலைகள் காரணமாக அதைச் செய்யத் தாமதமாகிவிட்டது. அது குறித்த சிலத் தகவல்கள் கீழே.

புது ப்ளாகர் வார்ப்புருக்களில் அண்மைய இடுகைகளையும், மறுமொழிகளையும் பதிவின் பக்கவாட்டில் காட்டும் வசதி இல்லை. அவற்றைக் கொண்டுவருவதற்கான எளிய வழிமுறைகள் இங்கே:

http://widget-based.blogspot.com/2006/11/recent-post-and-comments-for-blogger.html

பதிவில் உள்ள பல்வேறு ஆங்கிலச் சொற்களைத் தமிழில் மாற்றுவதுக் குறித்து: இந்தச் சொற்கள்/சொற்றொடர்கள் ஒவ்வொன்றையும் குறிக்க ஒரு data tag பயன்படுத்தப்படுகிறது. அவற்றைத் தமிழில் மாற்றும் வழி கீழே.

வார்ப்புருவைத் திருத்துவதற்கான "Edit HTML" பக்கத்துக்குச் செல்லுங்கள். வார்ப்புருவின் நகலைச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். அப்படிச் செய்வதன் மூலம் ஏதாவதுத் தவறாகிவிட்டால் பழைய நிலைக்கு மீண்டுவிடலாம். "Expand Widget Templates" என்னும் கட்டத்தைத் தேர்வுச் செய்துக் கொள்ளுங்கள். கீழே உள்ள tags இருக்கும் இடங்களை ஒவ்வொன்றாகத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை அகற்றிவிட்டு அந்த இடத்தில் வேண்டியத் தமிழ்ச் சொற்களை இடுங்கள். நான் ஒவ்வொரு tag-க்கும் உரியத் தமிழ் சொல்லைக் கீழேத் தந்திருக்கிறேன். அவற்றையோ அல்லது அதே பொருளுடைய வேறுச் சொற்களையோ பயன்படுத்தலாம்.

<data:commentLabel/> மறுமொழி
<data:commentLabelPlural/> மறுமொழிகள்
<data:top.authorLabel/> எழுதியவர்
<data:homeMsg/> முகப்பு
<data:olderPageTitle/> முந்தைய இடுகை
<data:newerPageTitle/> அடுத்த இடுகை
<data:postLabelsLabel/> குறிச்சொற்கள்
<data:post.backlinksLabel/> இந்த இடுகைக்குத் தொடுப்புகள்
<data:commentPostedByMsg/> சொல்வது:
<data:postCommentMsg/> உங்கள் கருத்தைத் தெரிவிக்க

அருமை, ஜெகத்! நன்றாக வேலை செய்கிறது!

மிக்க நன்றி!

நன்றி.

தங்கள் நிரல்துண்டை சரியான முறையில் உள்ளிட்டுவிட்டேன். ஆனால் மதங்களின் பெயர்கள் பக்கப் பகுதியில் (sidebar) இன்னமும் ஆங்கிலத்திலேயே தெரிகிறது. அதற்கு என்ன செய்யலாம்?

தாங்கள் தயவுசெய்து என் புதிய பதிவினை பார்வையிட வேண்டுகிறேன். இன்னும் தமிழாக்கம் செய்யப்படாத பகுதிகளை சீரமைக்க தங்களாலான உதவிகளை செய்தால் நான் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்.

நான் தமிழ் பதிவுலகிற்குப் புதிது என்பதால் எதுவுமே புரிவதற்கு சிறிது தாமதமாகிறது!

http://tamil498a.blogspot.com/

நன்றி

இ.பி.கோ 498அ,

உங்கள் பதிவில் sidebar-ல் மாதங்களின் பெயர்கள் எதுவும் ஆங்கிலத்தில் இல்லையே? தமிழில் தானே வருகிறது?

http://aayudhaezhuthu.blogspot.com/

http://aayudhaezhuthu.blogspot.com/


உங்க்ள் உதவிக்கு நன்றி. இதை மாற்றுவது எப்படி?

எழுதியவர் ஜோதி வேல் மூர்த்தி at மதியம் 12:25 0 comments

ஜோதி வேல் மூர்த்தி,

பதிவில் சொல்லியிருப்பதைப் போல data:i.name என்பதை சரியாக மாற்றி இருக்கிறீர்களா என்றுப் பாருங்கள்.

ஜெகத்!
பயன்படுத்தி இப்போது தமிழில் தெரிகிறது.
மிக்க நன்றி

/* புது பிளாகரில் புது வார்ப்புருவுடன் பயன்படுத்தக்கூடிய இந்த நிரல் */
- அருமை!

இதைப் போன்றே பழைய (classic template)வார்ப்புரு பயன்படுத்துபவர்களுக்கு ஏதேனும் வழியுண்டா?

The tags that store the date and time (e.g. data:post.dateHeader ) would be different in the old template. I think the code can be used for the old template too if the tags are replaced correctly. (I'm unable to type in Tamil currently.)

ம்ம்...முயற்சிட்டு சொல்றேன்...

HTML தெரியாத எனக்கு உங்கள் பதிப்பு மிகவும் உதவியாக இருக்கிறது,புரிந்த அளவு என் வலைபதிவை மாற்றி இருக்கிறேன் மிகவும் நன்றி.

நன்றிகள் ஜெகத் மிகவும் அழகாக வேலை செய்கின்றது சில இடங்களில் தான் இந்த மாதிரி ஒரு tag வந்துள்ளது என்ன காரணம்?.

அத்துடன் பின்னர் அந்த டெம்லேட்டை ஓப்பன் பண்ணிப்பார்க்க தமிழ் எழுத்துக்கள் குழம்பி இப்படி வருகின்றது .

//new Array("ஞாயிறு", "திங்கள்", "செவ்வாய்", "புதன்", "வியாழன்", "வெள்ளி", "சனி", "ஜனவரி", "பிப்ரவரி", "மார்ச்", "ஏப்ரல்", "மே", "ஜூன்", "ஜூலை", "ஆகஸ்ட்", "செப்டம்பர்", "அக்டோபர்", "நவம்பர்", "டிசம்பர்");//

வந்தியத்தேவன்,

/*இந்த மாதிரி ஒரு tag வந்துள்ளது என்ன காரணம்?*/

புரியவில்லை. என்ன tag?

/*தமிழ் எழுத்துக்கள் குழம்பி இப்படி வருகின்றது .*/

சரியாகத் தானே இருக்கிறது? ப்ளாகர் வார்ப்புருவில் சில தமிழ் எழுத்துக்களுக்குப் பதில் அவற்றுக்குரிய unicode எண்கள் தெரியும். அதனால் ஏதும் பிரச்சனையில்லை.

ஜெகத் நீங்கள் உருவாக்கிய நிரல்கள் தமிழில் வலைப்பதிய உதவியாக இருக்கின்றன. நன்றி!

ஜெகத்,
மிக்க நன்றி.
ஆனால், இன்னமும் at & date
(எழுதியவர் சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) at 1/03/2008)
வருகிறது. நீங்கள் கூறியபடி செய்தேன்.ஆனால்,அப்பைடியே வருட்கிறது. சிரமம் பாராமல் இது என்னவென்று பாருங்களேன்.

சிவா,

உங்கள் date format 1/03/2008 என்று இருந்தால் அதில் தமிழ்படுத்துவதற்கு ஏதும் இல்லை. மாறாக '3 January 2008' என்று இருந்தால் அதை '3 ஜனவரி 2008' என்று தமிழில் மாற்றலாம். உங்கள் date format-ஐ settings பக்கத்தில் மாற்றிக் கொள்ளலாம். அந்த இடத்தில் date தேவை இல்லையென்றால் <data:post.timestamp/> என்ற tag-ஐ உங்கள் template-ல் இருந்து அகற்றிவிடுங்கள். 'at' என்ற சொல்லுக்குரிய tag <data:post.timestampLabel/> என்று நினைக்கிறேன்.

உங்கள் பதிவில் மறுமொழிகளை எழுதியவர் பெயர் சரியாகக் காட்டப்படவில்லை. மாற்றங்கள் செய்ததில் ஏதாவது தவறு இருக்கிறதா என்று பாருங்கள்.

ஜெகத்,
ரொம்ப நன்றிங்க.
ஆமாங்க.எழுதியவர் மாற்றம் செய்யும்போது
'காணாமல்'(!) போய்விட்டது

//
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
ஜெகத்,
ரொம்ப நன்றிங்க.
ஆமாங்க.எழுதியவர் மாற்றம் செய்யும்போது
'காணாமல்'(!) போய்விட்டது
//
அடேங்கப்பா நீங்க இங்கதான் இருக்கீங்களா எல்லா ஸ்கிரிப்ட்டும் சரிபண்ணி டெம்ப்ளேட் XML ஒரு காப்பி எனக்கு குடுத்துருங்க நான் போட்டுக்கிறேன்!!

How is it!?!?!?

தங்கள் இடுகை மிக்க பயனுடையதாக இருந்தது. நன்றி ஜெகத்! நான் photoshop template ஐ பயன்படுத்துகிறேன். அதில் read more button ஐ எப்படி சேர்ப்பது?