புது ப்ளாகரில் பழைய பின்னூட்டங்கள் - தீர்வு

முன்குறிப்பு: சொந்தக்கதை கேட்க விரும்பாதவர்கள் அடுத்த மூன்று பத்திகளை விட்டுவிடலாம்.

என் பதிவின் வார்ப்புரு நீளமான இடுகைகளை வாசிப்பதற்கு வசதியாக இல்லை என்று நலம் விரும்பிகள் சிலர் தெரிவித்ததால் வழக்கமாக இம்மாதிரி விஷயங்களில் எனக்கு இருக்கும் சோம்பலை ஒரங்கட்டிவிட்டு புது ப்ளாகருக்கு மாறினேன். அப்படியே புது ப்ளாகர் அளிக்கும் புது வார்ப்புருவுக்கும் மேம்படுத்திக் கொண்டேன். மாறிய பின் பழைய பதிவுகளைப் பார்த்தால் பின்னூட்டம் இட்டவர்களது பெயர்கள் தமிழில் இருந்தால் அவை சரியாகத் தெரியவில்லை. இது குறித்து ப்ளாகர்/கூகிள் நிறுவனத்துக்கு முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர்கள் தற்போது எதுவும் செய்வதற்கு இல்லை என்று கையை விரித்து விட்டதாகவும் அறிந்தேன்.

இந்நிலையில் தமிழ்மண முகப்பில் சுட்டி அளிக்கப்பட்டிருந்த கோபியின் பதிவைப் பார்த்தேன். அவர் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக ஒரு நிரல் துண்டை அளித்திருந்தார். அதை வெட்டி என் வார்ப்புருவில் இட்ட பின் வார்ப்புருவை சேமிக்க முடியவில்லை. மர்மமான XML Error அறிவிப்புகள் வந்துக் கொண்டிருந்தன. XML, Javascript போன்றவற்றில் எவ்வித அறிமுகமும் இல்லாத எனக்கு (நான் தொழில்முறை மென்பொருளாளன் அல்ல) அவற்றை விளங்கிக் கொள்வது கடினமாக இருந்தது. பிறகு ஒருவழியாக error தகவலுக்கான காரணத்தைக் கண்டறிந்தேன். (XML-ல் <, >, & போன்ற சில சிறப்புக் குறிகளை அப்படியே நிரலில் (script) பயன்படுத்துவது குழப்பத்தை விளைவிக்குமாம். அவற்றுக்குப் பதில் முறையே &lt;, &gt;, &amp; என்று எழுதவேண்டும்.)

இவற்றை எல்லாம் சரிசெய்த பின்னும் பழையப் பின்னூட்டங்களை இட்டவர்களது பெயர்கள் தெரியவில்லை. பிறகு கோபியின் பதிவில் அவரது பின்னூட்டங்களைப் பார்த்தபோது அவர் புது ப்ளாகருக்கு மாறிய பின்னும் Classic Template எனப்படும் பழைய வார்ப்புருவையே பயன்படுத்துகிறார் என்பது தெரிந்தது. அப்படி பழைய வார்ப்புருவைப் பயன்படுத்துவோருக்கு அவரது நிரல் தீர்வாக அமையக் கூடும். ஆனால் பெரும்பாலானாவர்கள் புது ப்ளாகருக்கு மாறியபின் புது வார்ப்புருவுக்கு மேம்படுத்திக் கொண்டுவிட்டனர். அவர்களுடைய பதிவில் இந்த நிரல் துண்டு வேலை செய்யாது என்பதை சில மணிநேரங்கள் மெனக்கெட்ட பின் சர்வ நிச்சயமாக அறிந்துக்கொண்டேன். ஏன் வேலை செய்யாது என்பதும் புரிந்தது. வேலை செய்யக்கூடிய ஒரு நிரல் துண்டை நாமே எழுதிவிடலாம் என்ற எண்ணம் மூளையில் ஏறியது. அப்படி எழுதியது சரியாகச் செயல்படுகிறது என்பதற்கு என் பழையப் பதிவுகளில் உள்ள பின்னூட்டங்களில் அட்சர சுத்தமாகத் தெரியும் பெயர்களே ஆதாரம்.

இந்த நிரல் புது ப்ளாகரில் புது வார்ப்புருவுக்கு மேம்படுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே. பின்னூட்டமிட்டவரது பெயர் ஆங்கிலம், தமிழ் அல்லாத வேறு மொழிகளில் இருந்தால் தெரியாது. இந்த தீர்வு தமிழ் பெயர்களுக்கு மட்டுமே.

நீங்கள் செய்யவேண்டியது:

1. வார்ப்புருவின் Edit HTML tab-க்கு செல்லுங்கள். "Expand Widget Templates" என்றக் கட்டத்தை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் </HEAD> என்ற இடத்துக்கு மேலே ஒட்டுங்கள்.

<script>
function to_unicode(stg)
{
ostg = &quot;&quot;;
i = 0;
while(i &lt; stg.length)
{
if(stg.charCodeAt(i) == 224)
{
if(stg.charCodeAt(i+1) == 38)
{
secondchar = (stg.charCodeAt(i+3)-48)*100 + (stg.charCodeAt(i+4)-48)*10 + (stg.charCodeAt(i+5)-48);
if(stg.charCodeAt(i+7) == 38)
{
mainchar = (stg.charCodeAt(i+9)-48)*100 + (stg.charCodeAt(i+10)-48)*10 + (stg.charCodeAt(i+11)-48);
i += 13;
}
else
{
mainchar = stg.charCodeAt(i+7);
i += 8;
}
}
else
{
secondchar = stg.charCodeAt(i+1);
if(stg.charCodeAt(i+2) == 38)
{
mainchar = (stg.charCodeAt(i+4)-48)*100 + (stg.charCodeAt(i+5)-48)*10 + (stg.charCodeAt(i+6)-48);
i += 8;
}
else
{
mainchar = stg.charCodeAt(i+2);
i += 3;
}
}
mainchar += 2816;
if (secondchar == 175)
mainchar += 64;
ostg += String.fromCharCode(mainchar);
}
else
{
ostg += String.fromCharCode(stg.charCodeAt(i));
i++;
}
}
return ostg;
}
</script>

2. வார்ப்புருவில் இரண்டு இடங்களில் <data:comment.author/> என்று இருக்கும். அதை அகற்றிவிட்டு அந்த இடங்களில் கீழே உள்ளதை இடுங்கள்.

<script>document.write(to_unicode('<data:comment.author/>'))</script>

3. வார்ப்புருவை சேமியுங்கள். பழைய பின்னூட்டங்களை இட்டவர்களது பெயர்கள் இப்போது சரியாகத் தெரியும்.

பி.கு: இந்த தகவல்களை நீங்கள் தாராளமாக எங்கு வேண்டுமானாலும் மறு பிரசுரம் செய்யலாம்.

55 மறுமொழிகள்:

எங்கும் தமிழ்,எப்படியும் தமிழ்.
உங்கள் அயராத முயற்சிக்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றி.
முயற்சித்துவிட்டு மீதி சொல்கிறேன்.

நன்றி உடனே முயற்சித்து விளைவைக் கூறுகின்றேன்!

அடேங்கப்பா!
ஸ்கிரிப்ட் ஜோராக வேலை செய்யுதுங்கோ நன்றிகள்.

மாற்றிவிட்டேன்.
நன்றாக வேலை செய்கிறது.

ஜெகத்,

நன்றாக வேலைசெய்கிறது.
உங்களுக்கு இரட்டிப்பு நன்றி. இதற்குத் தீர்வை ஆரம்பித்து வைத்த கோபிக்கும் நன்றிகள்.
அன்புடன்,

மா சிவகுமார்

நன்றி.

அப்பாடா பின்னூட்டத்துல பறந்துகிட்டு இருந்த எல்லா பூச்சியும் போயே போச்சு.

தாங்ஸ்.

நன்றி ஜெகத்!

ஜெகத்!

பாராட்டுக்கள். சரியாக வேலை செய்கிறது. ரொம்ப நன்றி. தொடங்கிவைத்த கோபிக்கும் நன்றி

பூச்சிகள் பறந்து எழுத்துக்கள் வந்து விட்டன.
நன்றி திரு.ஜெகத்

ஜெகத், பாராட்டுக்கள். இப்போது ஒழுங்காக வருகிறது. கோபிக்கும் எனது நன்றிகள்.

ஜெகத்!

பயனுள்ள நிரல்கள்!
மிகவும் உதவியாக இருந்தது!

உங்களுக்கும், கோபி அவர்களுக்கும் நன்றி!

நிரல் அனைவருக்கும் பயனுள்ளதாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையில் கோபியின் பதிவைப் பார்த்திராவிட்டால் நான் இந்த முயற்சியில் இறங்கியிருக்க மாட்டேன். அவருக்கு என் நன்றி. ஏதாவது புதிதாகக் கற்றுக்கொண்டால் எனக்கு சில நாட்களுக்குக் கை பரபரப்பது வழக்கம். இப்போது ஸ்க்ரிப்ட் எழுதிப் பழகுகிறேன்:-)

நன்றாக வேலை செய்கிறது மிக்க நன்றி.

romba nanri apidiye antha pdf creater phthu blog la sariya work pana ena seinum endu oru pathivu podunga.

என்னுடைய templet-ல் data:comment.author/ என்ற பகுதி இல்லையே! என்ன செய்வது?

அருமை நண்பரே, நன்றிகள் பல.

ஜோ,

உங்கள் பதிவைப் பார்த்ததில் நீங்கள் புது பிளாகருக்கு மாறிய பின்னும் Classic Template எனப்படும் பழைய வார்ப்புருவையே பயன்படுத்துகிறீர்கள் என்றுத் தெரிகிறது. அதில் data:comment.author/ இருக்காது. நீங்கள் பழைய வார்ப்புருவையேத் தொடர்ந்து பயன்படுத்துவதாக இருந்தால் நான் சுட்டி அளித்திருக்கும் கோபியின் பதிவில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றிப் பாருங்கள். வார்ப்புருவை சேமிக்க முடியாமல் Error அறிவிப்புகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை மேலே பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

அல்லது நீங்கள் புது பிளாகர் அளிக்கும் புது வார்ப்புருவுக்கு மேம்படுத்திக் கொள்ளலாம். (நீங்கள் உங்கள் பிளாகர் கணக்கில் log in செய்தால் Upgrade Template என்னும் option இருக்கும் என்று நினைக்கிறேன்.) அப்படி செய்த பிறகு இந்தப் பதிவில் உள்ள நிரலைப் பயன்படுத்தலாம்.

ஜெகத்,

அருமை. எனது பதிவில் புது வார்ப்புரு பயன்படுத்துவோருக்கு உங்கள் இந்த இடுகையிலுள்ளவாறு செய்ய சுட்டி கொடுத்துவிட்டேன்.

நல்ல பயனுள்ள பதிவு. நேரத்தையும் நாளையும் தமிழில் மாற்றியிருக்கிறிர்களே, அதையும் (எனக்கு மட்டுமாவது) பகிர்வீர்களா ? பிளாக்கர் help forumஇல் கூட கேட்டிருக்கிறேன். ஒருவரும் கண்டுகொள்ளவில்லை :(

உபயோகித்தேன். நன்றி கோபி & ஜெகத்.

மணியன்,

இதில் ரகசியம் ஏதுமில்லை. கண்டிப்பாகப் பகிர்ந்துக் கொள்கிறேன். இன்னும் சொல்லப்போனால் மாதத்தையும் கிழமையையும் தமிழில் காட்டும் நிரல் துண்டை பெயரிலி, தருமி போன்றப் பதிவர்கள் நீண்ட நாட்களாகவே பயன்படுத்தி வருகிறார்கள். நான் AM/PM என்றிருப்பதை அகற்றிவிட்டு காலை, மாலை, இரவு என்று போடுவதற்கான ஒரு சிறுத் துண்டையும் சேர்த்துக்கொண்டேன். நிரலையும் வழிமுறைகளையும் நாளை இரவு அல்லது நாளை மறுநாள் இங்கே இடுகிறேன்.

நன்றி . நன்றாக வேலை செய்கிறது

மிக்க நன்றி அய்யா! மிகச் சிறப்பாக் வேலை செய்கிறது

அசுரன்

//நன்றி . நன்றாக வேலை செய்கிறது//

ரிப்பீட்டேய்!!

ஜெகத்,

நான் நீங்கள் சொல்லியபடி செய்து விட்டேன். என் வலைப்பூவின் முதல் பக்கத்தில் தமிழ்ப் பெயர்கள் சரியாகத் தெரிகின்றன. ஆனால் பின்னூட்டம் போடும் பக்கத்தில் மீண்டும் பூச்சியாய் மாறி விடுகிறதே. இதற்கு ஏதேனும் வழி சொல்லுங்களேன்.

நன்றி.

மீண்டும் தொந்தரவுக்கு மன்னிக்கவும். சில பதிவர்கள் பெயர்கள் மட்டும் Anonymous என மாறி விட்டதே? எனக்கும் மட்டும்தான் இந்தப் பிரச்சனையா? கொஞ்சம் விளக்குவீர்களா?

மீண்டும் நன்றி.

ஜெகத்.
அருமையான வேலை செய்கிரீர்கள். மிக்க நன்றி. தொடர்ந்து இதுபோல பயனுள்ள உதவிகளைச் செய்ய வாழ்த்துகிறேன்.

தமிழ் பதிவுகளுக்கென தனிப்பட்ட முறையில் புதிதாய் கருவிகள் செய்ய இயலுமா எனவும் யோசியுங்கள்.

குறள் Browser போல ...
அல்லது செய்தித் தாள் RSS feed கொண்ட டூல்ஸ் என ஏதாவது செய்யலாம்.
பின்னூட்டங்களின் எண்ணிக்கையை அலச ஏதாவது யோசிக்கலாம்

ஒரு கேள்வி?
நான் புதிய ப்ளாகரில் பழைய வார்ப்புருவை(Template) பயன்படுத்துகிறேன். பதிவில் உள்ள தீர்வு எனக்கு பயன்படவில்லை நான் வேறெதாவதி தெய்தால் சரியாகுமா?

என் பதிவு

என் மின்னஞ்சல் cvalex at yahoo . com

இலவசக்கொத்தனார்,

பின்னூட்டங்களை உள்ளிடும் பக்கம் நமதுக் கட்டுப்பாட்டில் இல்லை. கூகிளில் இருப்பவர்கள் மனது வைத்தால் தான் ஏதாவது நடக்கும்.

/*சில பதிவர்கள் பெயர்கள் மட்டும் Anonymous என மாறி விட்டதே?*/

எனக்கு ஒரே ஒரு முறை இது போல் நடந்தது என்று நினைக்கிறேன். சென்றப் பதிவில் மதியின் பின்னூட்டம் முதலில் அவருடைய பெயருடன் வந்ததாக நினைவு. புது பிளாகருக்கு மாறிய பின் பார்த்தபோது Anonymous என்று இருந்தது. அது நான் இந்தப் "பூச்சிக்கொல்லி" நிரலை முயற்சித்துப் பார்ப்பதற்கு முன்னால். ஆனால் மற்ற அனைவரின் பெயர்களும் சரியாகத் தான் இருக்கின்றன. பிளாகர் தளத்தில் தேடிப் பார்த்து ஏதாவது தெரிய வந்தால் இங்கேப் பகிர்ந்துக் கொள்கிறேன்.

சிறில்,

நான் மென்பொருள் துறையில் இல்லை. இணையத்துடன் தொடர்புடைய நுட்பங்களுடன் அவ்வளவாக பரிச்சயமும் இல்லை. இருந்தாலும் நீங்கள் சொன்னவற்றைக் குறித்து ஏதேனும் செய்யமுடியுமா என்று யோசிக்கிறேன்.

நீங்கள் பழைய வார்ப்புருவையேத் தொடர்ந்துப் பயன்படுத்துவதானால் கோபியின் பதிவில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். வார்ப்புருவை சேமிக்க முடியாமல் Error அறிவிப்புகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை மேலே பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். சரியாக வரவில்லை என்றால் கோபிக்கு அல்லது எனக்குத் தெரியப்படுத்துங்கள். சரி செய்துவிடலாம்.

மணியன்,

நீங்கள் கேட்ட விவரங்களை நாளைக்குள் தருகிறேன். எல்லா date formats-உடனும் வேலை செய்வதற்கு ஏற்றவாறு நிரலில் சில மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்தது.

மணியன்,

தமிழில் நாள் காட்டுவதற்கான நிரலைத் தனிப் பதிவாக இட்டிருக்கிறேன். பயன்படுத்துவதில் ஏதேனும் பிரச்சனை இருப்பின் சொல்லுங்கள்.

சிநேகிதி,

உங்களுக்குப் பதில் அளிக்க நினைத்தது விடுபட்டுவிட்டது. மன்னிக்கவும். நான் பலவாறு முயற்சித்தும் இடுகையை PDF-ஆக மாற்ற முடியவில்லை. அதற்கான நிரலை உருவாக்கியவர்கள் என்ற முறையில் தமிழ்மணத்தார் தான் வழிகாட்ட வேண்டும்.

நன்றி ஜகத். உங்களது கோடை நானும் பயன்படுத்திப் பயன்பெற்றேன். ஜாங்கிரிகள் நீங்கி விட்டன. புதிய பின்னூட்டங்கள் தெளிவாக வருகின்றன.

அதே நேரத்தில் நான் மாறும் முன்பே மாறியவர்கள் முன்பு இட்ட பின்னூட்டங்கள் அனானிமசாக வருகின்றனவே! அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ராகவன்,

நீங்கள் குறிப்பிடும் பிரச்சனை தமிழ்/யுனிகோட் ஆகியவற்றுடன் தொடர்புடையது அல்ல. (மேலே இலவசக்கொத்தனாருக்கு நான் அளித்த பதிலையும் பாருங்கள்.) இதுக் குறித்து தேடியபோது நிறைய ஆங்கிலப் பதிவுகளிலும் இந்தப் பிரச்சனை இருப்பது தெரிந்தது. (குறிப்பாகக் கடந்த ஒரு வாரத்தில் மாறியவர்களுக்கு.) ஆனால் யாருக்கும் காரணம் தெரியவில்லை. பிளாகர் Known issues பக்கம் (http://knownissues.blogspot.com/search/label/comments) புது பிளாகருக்கு மாறியவர்கள் பழைய பிளாகர் பதிவுகளில் பின்னூட்டம் இடுவதில் உள்ள பிரச்சனைகள் குறித்துப் பேசுகிறது. ஆனால் சில பெயர்கள் Anonymous என்று மாறிவிடுவதுக் குறித்து ஏதும் இல்லை. அவர்களுக்குத் தெரியவந்தாலும் மாற்றத்தின் போது நடந்த இந்தத் தவறை இனிமேல் சரி செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றேத் தோன்றுகிறது.

உங்கள் சேவைக்கு நன்றி, ஆனால் எனக்குப் பிரச்சனை ஒன்று வருகிறது:

document.write(to_unicode('data:comment.author')

என்று வெட்டி ஒட்டியது, சேமித்த பின் கீழெ உள்ளது போல் மாறிவிடுகிரது. அதனால் வேலை செய்யவில்லை.

document.write(to_unicode('data:comment.author')

என்ன செய்யலாம்?
Your HTML cannot be accepted: Tag is not allowed: data:comment.author

மேலுள்ள பிரச்சினையால் HTML tags ஐ நீக்கி விட்டேன்.
பிரச்சினை:
' translates into '

செயபால்,

அந்த வரியை வெட்டி ஒட்டியதில் ஏதாவது விடுபட்டுவிட்டதா என்றுப் பாருங்கள். எடுத்துக்காட்டாக Less than, Greater than, Slash போன்றக் குறிகள் தவறுதலாக விடுபட்டுவிட்டால் குழப்பம் ஏற்படும். உங்கள் பின்னூட்டத்தில் உள்ள வரியில் இவற்றைக் காணவில்லை. (சில நேரங்களில் பின்னூட்டப் பெட்டி இந்தச் சிறப்புக் குறிகளை விழுங்கிவிடும்.) script என்றக் குறிச்சொல்லையும் காணவில்லை. மீண்டும் ஒருமுறை பதிவில் இருக்கும் வரியை அப்படியே வெட்டி சரியான இடத்தில் இட்டுப் பாருங்கள். தேவைப்பட்டால் jagadg at gmail.com என்ற முகவரியில் என்னைத் தொடர்புக் கொள்ளலாம்.

பின்னூட்டங்களில் இருந்த சில பெயர்களே பழைய நிலைக்குத் திரும்பியுள்ளன. சில பெயர்கள் அப்படியே அனானிமஸ் ஆக மாறிவிட்டன. என்ன நடந்ததென்று தெரியவில்லை. ஏதோ வந்தவரையில் திருப்தி என்று விட்டிருக்கிறேன். நன்றி.

நடந்த விஷயம் இதுதான்னு நினைக்கிறேன்.

பழைய பிளாக்கரில் இருக்கும் ஒரு பதிவுக்கு, புதிய பிளாக்கர் கணக்கு வைத்திருக்கும் பதிவர் ஒரு பின்னூட்டம் இட்டால் அது சரியாகத் தெரிந்து வந்தது.

ஆனால் அந்த பழைய பிளாக்கரைப் புதிய பிளாக்கருக்கு மாற்றும் பொழுது இவர்களின் பெயர் மறைந்து அனானிநாதர்களாக ஆகிவிடுகிறார்கள்.

நான் சொல்வது சரியா என இப்பிரச்சனையை எதிர்கொண்ட மற்றவர்கள் சொல்லலாம்.

ஜெகத், வலைப்பதிவர்க்கான நுட்பங்கள் குறித்து நீங்கள் பதிவுகள் எழுதுபவர் என்ற முறையிலும், கூகுள் ரீடர் அறிந்தவர் என்ற முறையிலும், உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தமிழ் வலைப்பதிவுத் திரட்டுகள், காட்சிப்படுத்தல்களில் ஒரு புது தன்னார்வக் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். உங்கள் உதவி தேவைப்படுகிறது. பார்க்க - http://thamizhthendral.blogspot.com/2007/02/google-reader.html

மேல்விவரங்களை, நீங்கள் விரும்பினால் தனி மடலில் அறியத்தருகிறேன். நன்றி.

அரைக் கிணறுதான் தாண்டி இருக்கேன்!

'ஜோ' சொன்னதேதான் எனக்கும்.

data:comment.author/
பகுதி இல்லை(-:

உதவி ப்ளீஸ்.

இப்படிக்கு ஒரிஜனல் க.கை.நா.

என் பின்னூட்டம் என்ன ஆயிற்று?
வழி காட்டுங்களேன்.

ennataa vambu: உங்கள் பின்னூட்டம் ஏதும் இதற்கு முன்னால் எனக்கு வந்துச் சேரவில்லையே? ஏதாவதுக் கேட்டிருந்தீர்களா?

துளசி அவர்களுக்கு: உங்களுக்கானத் தீர்வு கோபியின் பதிவில் இருக்கிறது. மேலே ஜோவுக்கு நான் அளித்தப் பதிலையும் பாருங்கள்.

ரவிசங்கர்: உங்கள் பதிவை நேற்றேப் படித்துவிட்டேன். கூகிள் ரீடர் பயன்படுத்துவோருக்கு நீங்கள் வைத்திருந்த வேண்டுகோள் எனக்குப் பொருந்தாது என்றுத் தோன்றியது. காரணம், நான் படித்தவற்றில் விருப்பமான இடுகைகளை பரிந்துரைக்க கூகிள் ரீடரைப் பயன்படுத்தவில்லை. எனக்குப் பிடித்த சிலப் பதிவர்கள் எழுதும் எல்லா இடுகைகளையும் தானியக்கமுறையில் என் பதிவின் பக்கவாட்டில் வருமாறுச் செய்திருக்கிறேன். இந்தப் பதிவர்களில் அனைவருக்கும் signal-to-noise விகிதம் ஒரே போல இருக்காது. ஆகையால் என் பதிவில் காட்டப்படும் எல்லா இடுகைகளும் சிறந்தவை என்றுச் சொல்ல முடியாது. அவ்வப்போதேனும் சிறந்த இடுகைகளை எழுதும் ஆற்றல் உடையப் பதிவர்கள் எழுதிய இடுகைகள் எனலாம்.

என்னுடைய இந்த இடுகையும், இதற்கு அடுத்த இடுகையும் நான் வலைப்பதிவு நுட்பங்களை நன்றாக அறிந்தவன் என்றத் தோற்றத்தை ஏற்படுத்திருக்கக்கூடும். உண்மையில் இரண்டு வாரங்களுக்கு முன் ஜாவாஸ்கிரிப்டில் தற்செயலாகத் தடுக்கி விழுவதற்கு முன்னால் எனக்கு bold, italics, link ஆகிய html tags பயன்படுத்துவதைத் தவிர்த்து வேறெதுவும் தெரிந்திருக்கவில்லை. இப்போது இதில் ஏற்பட்டுவிட்ட ஆர்வம் மற்றும் இங்குக் கிடைத்த வரவேற்புக் காரணமாக தமிழ் கணினி தொடர்பான (என்னளவில் முக்கியமான) ஒரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். ஒரளவுக்கு சாதகமான முடிவுகள் கிடைத்தால் இங்கேப் பகிர்ந்துக் கொள்வதாக எண்ணம். எப்படி இருந்தாலும் நான் உங்கள் முயற்சிகளுக்கு ஏதாவது முறையில் உதவ முடியும் என்று நீங்கள் கருதினால் jagadg at gmail dot com என்ற முகவரியில் என்னைத் தொடர்புக்கொள்ளலாம். நன்றி.

அன்பு ஜெகத்,
ennataa vambu நான் தான்.
புது புளாக்கார் இந்த id இல்லை என பலமுறை சொன்னதால் சினமுற்று enntaavambu எனக் கொத்திவிட்டேன். எப்பொழுது பின்னூட்டம் இட்டாலும் அந்த வம்பே முன்னால் நிற்கிறது.
மிகவும் தொல்லைப்பட்டுக் கொண்டுள்ளேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

ஞானவெட்டியான் அய்யா: நான் உங்கள் பிரச்சனையைச் சரியாகப் புரிந்துக்கொண்டேனா என்றுத் தெரியவில்லை. நான் விளங்கிக் கொண்டது:

நீங்கள் புது ப்ளாகருக்கு மாறும் போது ஒரு கூகிள் / ஜிமெயில் id -ஐ பயன்படுத்தியிருப்பீர்கள். அந்த id ABC என்று வைத்துக்கொள்வோம். இப்போது நீங்கள் பின்னூட்டம் இட முயலும்போது USERNAME என்னும் இடத்தில் ABC என்று இட்டு உள்ளே நுழைய முயல்கிறீர்கள். ப்ளாகர் உங்களுக்கு அனுமதி மறுத்துவிடுகிறது.

அப்படியானால், USERNAME என்னும் இடத்தில் ABC@gmail.com என்று முழு மின்னஞ்சல் முகவரியையும் இட்டுப் பாருங்கள். ஒருவேளை வேலைச் செய்யக்கூடும். இணையத்தில் தேடிப்பார்த்து வேறு ஏதாவதுத் தகவல் கிடைத்தால் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

நன்றி, ஜெகத். நீங்கள் எப்படி auto-share செய்கிறீர்கள் என்று அறிய ஆவல்.

உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். என்றாவது, நீங்கள் autoshare அல்லாமல் விரும்பி share செய்யும் நிலை வந்தால் சொல்லி அனுப்புங்கள் :)

கூகிள் ரீடரில் திரட்டப்படும் இடுகைகளை தானியக்க முறையில் பதிவில் பகிர்ந்துக் கொள்ளும் முறை:

1. கூகிள் ரீடரில் "Manage Subscriptions" என்னும் சுட்டியின் மூலம் "Subscriptions" பக்கத்துக்குச் செல்லுங்கள்.

2. அந்தப் பக்கத்தில் திரட்டப்படும் ஒவ்வொருப் பதிவிற்கு எதிரேயும் "Change folders" என்று இருக்கும். அவற்றில் ஏதாவது ஒன்றைச் சுட்டினால் "New folder" என்று வரும். அதைத் தேர்வு செய்து ஒரு புது folder உருவாக்கிக் கொள்ளுங்கள். அந்த folder-க்கு ஏதாவதுப் பெயரிடுங்கள் (எ.கா: MyBasket).

3. இப்போது ஒவ்வொருப் பதிவுக்கும் எதிரே இருக்கும் "Change folders" வசதியைப் பயன்படுத்திப் பதிவுகளை "MyBasket"-உடன் tag செய்துக் கொள்ளுங்கள்.

4. Tags பக்கத்துக்குப் போய் MyBasket அருகில் இருக்கும் கட்டத்தைத் தேர்வுச் செய்யுங்கள். பின் "Change sharing" என்னும் drop-down menu மூலம் MyBasket-ஐ public-ஆக மாற்றிக்கொள்ளுங்கள்.

5. MyBasket இருக்கும் அதே வரியில் உள்ள "add a clip to your site" சுட்டியின் மூலம் உங்கள் வலைப்பதிவின் வார்ப்புருவில் சேர்க்கவேண்டிய நிரலைப் பெற்றுக்கொள்ளலாம்.

நிரலைச் வார்ப்புருவில் சரியாகச் சேர்த்தபின் உங்கள் பதிவின் பக்கவாட்டில் உள்ளப் பட்டியலில் நீங்கள் விரும்பும் பதிவர்கள் அண்மையில் எழுதிய இடுகைகள் தானியக்க முறையில் தோன்றும்.

விரிவான விளக்கத்தக்கு நன்றி, ஜெகத்

இன்னிக்கு தான் இந்த நிரலை என் பதிவில் இட்டேன். நல்லா வேலை செய்யுது. ரொம்ப பயனுள்ளதா இருக்கு. நன்றி

ஜெகத், இடுகையின் பக்கத்தில் பழைய பின்னூட்டப் பெயர்கள் சரியாகத் தெரிகின்றன. ஆனால், பின்னூட்டம் இடும் பக்கத்தில் எல்லாம் பூச்சியா தெரியுதே?

ரவிசங்கர்,

வார்ப்புருவில் மாற்றங்கள் செய்வதன் மூலம் Blogspot முகவரியில் உள்ள நமதுப் பதிவை மட்டுமே நாம் கட்டுப்படுத்த முடியும். Blogger முகவரியில் உள்ள பின்னூட்டங்களை உள்ளிடும் பக்கம் நம் கட்டுப்பாட்டில் இல்லை. அதிலுள்ள 'பூச்சி'களுக்கு கூகிள் நிறுவனத்தார் ஏதேனும் பூச்சிக்கொல்லி மருந்துக் கண்டுபிடித்தால் தான் உண்டு :-)

விளக்கத்துக்கு நன்றி, ஜெகத்

எனது வலைபதிவில் தாங்கள் சொன்னது போல் மாற்றியமைத்தும் முன்னது போலவே எழுத்துக்களை காண்கிறேன்.மேலுன் new post செய்தால் tool bar தெரிவதில்லை என்ன செய்யலாம்.

Podakkudian,

இந்த நிரலைக் குறைந்தது நூறு பேராவது வெற்றிகரமாகச் சோதித்துவிட்டார்கள் என்பதால் நீங்கள் வார்ப்புருவில் மாற்றங்கள் செய்யும்போது ஏதாவது தவறு நடந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். மீண்டும் ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள். உங்கள் பக்கத்தின் HTML source-ஐ பார்த்தேன். <data:comment.author/> என்னும் tag சரியாக மாற்றப்படவில்லை என்றுத் தெரிகிறது. நீங்கள் சொல்லும் tool-bar பிரச்சனையை நான் சந்தித்ததில்லை. Blogger support group-ல் தேடி/கேட்டுப் பாருங்கள்.

நன்றாக வேலை செய்கிறது. நன்றிகள் பல.

இந்த ஜிலேபி வழு என் முழு wordpressஐயும் தாக்கி இருக்கிறது. உதவ முடியுமா?

பார்க்க - http://wordpress.org/support/topic/119943?replies#post-567089

ரவி, உங்கள் பதிவைப் பார்த்தேன். ஜிலேபிகளை வெற்றிகரமாக சாப்பிட்டுவிட்டீர்கள் போலிருக்கிறது :-)

ஆமா, பிரச்சினை முடிஞ்சிருச்சு..நன்றி..கிரேக்கம் மற்றும் பல நாட்டவர்க்கும் இந்த ஜிலேபி கிடைச்சிருக்கும் போல ;)

அப்பா..டா.... ஒரு வழியாக தீர்வு கிடைத்தது. மிக்க நன்றி உங்கள் உதவிக்கு. பின்னூட்டம் எழுதுபவர்களின் பெயர் தெரியாமல் குழம்பி, புலம்பி இருந்த எனக்கு இப்போது தான் நிம்மதி பெருமூச்சே வந்தது. நன்றி. நன்றி.. நன்றி...