நாகர்கோவில் - விண்ணின்று


திரவியம் தேடுகிறோமோ இல்லையோ, திரைகடலோடிய பிறகு தான் சொந்த ஊரின் ஈர்ப்பு அதிகரிக்கிறது. சிறு வயதிலிருந்து எத்தனையோ முறை பார்த்த இடங்கள் தான் என்றாலும் கூகுள் எர்த் மூலம் ஒரு முற்றிலும் புதியக் கோணத்தில் பார்த்தபோது வியப்பாகயிருந்தது.

நேரம் வாய்த்தால் நாகர்கோவிலைக் குறித்து ஒரு பதிவிடலாமென எண்ணம்.

2 மறுமொழிகள்:

ஜெகத்,
வலைப்பதிவுகளுக்கு வரவேற்கிறேன்.

முட்டம் பற்றிய என் பதிவுகளைப் muttom.blogspot.comல் பார்க்கலாம்.

செயமோகன் பற்றிய உங்கள் விமர்சனங்களைப் படித்தேன். அவரைப் போலவே நீங்களும் ஒரு சிறந்த திறனாய்வாளர் என்பதைக் காட்டியிருக்கிறீர்கள்.

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

நாகர்கோவில் படம் பார்க்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி. நாகர் கோவில் பற்றிய பதிவுகள் எப்ப துவக்கம்?

சிறில்,

நன்றி. முட்டம் பற்றி நீங்கள் எழுதிக் கொண்டிருந்தபோதே விரும்பிப் படித்திருக்கிறேன். முட்டத்தோடு எனக்கு நெருக்கம் அதிகம். உங்களுக்கு அது பிறந்த ஊர் என்றால் எனக்கு புகுந்த ஊர்.

நாகர்கோவில் எழுத்தாளர்களைப் பற்றிக் கொஞ்சம் எழுதியிருந்தாலும் ஊரைப் பற்றி எதுவும் இன்னும் எழுதவில்லை. ஆனால் என் அனுபவங்களைக் குறித்து ஏதேனும் எழுதினால் நாகர்கோவில் பற்றியக் குறிப்புகள் கட்டாயம் இடம்பெறும். கூடிய விரைவில் எழுத முயல்கிறேன்.