நாகர்கோவில்காரர்களும் நவீன இலக்கியமும்

முதலில் ஒரு சிறு விளக்கம். தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் ஒரு தொடக்கநிலை வாசகன் மட்டுமே. இலக்கிய விவாதங்களில் பங்கேற்பதற்கான பயிற்சியோ புரிதலோ எனக்கில்லை. இருந்தாலும் நான் படிக்கும் நூல்களைப் பற்றிய என் எண்ணங்கள் இப்பதிவுகளில் இடம்பெறக்கூடும். தவறுகள் இருப்பின் இலக்கிய உஸ்தாதுகள் பொறுத்தருள்வார்களாக.

எண்பதுகளின் பிற்பாதியில் நாகர்கோவிலிலிருந்துப் புறப்பட்டுப்போய் சென்னை பள்ளியொன்றில் விடுதியில் தங்கிப் படிக்கத் தொடங்கியபோது நிறையப் புது அனுபவங்கள். அதில் ஒன்று என் பேச்சுமொழியும் உச்சரிப்பும் கேலிக்குள்ளானது. சென்னைப் பையன்கள் நான் பேசுவது தமிழே அல்ல என்றார்கள். ஒருமுறை வழியை மறித்துக்கொண்டிருந்த ஒரு சக மாணவனிடம் "கொஞ்சம் நீங்கு" என்றதும், அவன் சற்று நேரம் மலங்க மலங்க விழித்துவிட்டு "ஓ, மூவ் பண்ண சொல்றியா?" என்று 'தமிழில்' திருப்பிக் கேட்டதும் இன்றும் நினைவிருக்கிறது. சென்னைக்காரர்கள் பேசுவதைவிட குமரி மாவட்டத்தவர் தமிழை சரியாகவே பேசுகிறார்கள் என்றும் பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள பல சொற்கள் எங்கள் அன்றாட பேச்சுவழக்கில் இருப்பதையும் சுட்டிக்காட்ட நான் மேற்கொண்ட முயற்சிகள் படுதோல்வியடைந்தன. தமிழ்ப் பாடத்தில் முதலாவதாக வந்தும் இந்த நிலை மாறவில்லை. ஏதோ கொஞ்சம் தமிழ் தெரிந்த ஒரு மலையாளி என்பதே பொதுவான எண்ணமாக இருந்தது.

ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை (இப்போதைய நிலைமை வேறு) தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்குப் படிக்கவோ வேலைக்காகவோ போகும் குமரி மாவட்டத்துக்காரர்கள் 'மலையாளிகள்' என முத்திரைக் குத்தப்படுவது வெகு சகஜம். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக சென்னையில் வாழும், மலையாளத்தில் பிழையின்றி ஒரு வாக்கியம் கூடப் பேசத்தெரியாத என் உறவினர் ஒருவரை அவரது தெருவாசிகள் 'மலையாளத்தம்மா' என்று தான் அழைக்கிறார்கள். நாகர்கோவில் எஸ். கிருஷ்ணனை திருமணம் செய்ய மதுரம் முடிவெடுத்தபோது அவரது தாயார் எச்சரித்தாராம் "அவன் மலையாளத்தான். மந்திரம் போட்டிருவான் ஜாக்கிரதை!".

சில ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை குமுதத்தில் (அப்போதெல்லாம் தமிழில் என் வாசிப்பு பெரும்பாலும் குமுதம், விகடன் என்ற அளவிலேயே இருந்தது) கேள்வி-பதில் பகுதியை மேய்ந்துக்கொண்டிருந்தப்போது ஒரு பதில் வழக்கமான 'அரசு'த்தனங்களையும் தாண்டி அபத்தமாகப் பட்டது. குமுதத்தில் இலக்கியத்தரமான படைப்புகள் ஏன் வெளியாவதில்லை என்பது போன்ற ஒரு கேள்விக்கு அரசுவின் பதில் "உங்களுக்கு சொந்த ஊர் நாகர்கோவிலா?" என்றிருந்தது. சிறிதுகாலம் கழித்து ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தப்போது தான் அந்த எள்ளலின் பொருள் விளங்கியது. அது சாகித்ய அகாடமி வெளியிட்டிருந்த "நவீனத் தமிழ் சிறுகதைகள்" என்றத் தொகுப்பு. கடந்த நாற்பது வருடங்களாகத் தமிழில் எழுதியவர்களில் முக்கியமான முப்பத்தைந்துப் பேரைத் தேர்ந்தெடுத்து ஆளுக்கு ஒரு சிறுகதை விகிதம் தொகுத்திருந்தார்கள். ஆசிரியர் குறிப்புப் பக்கங்களைப் புரட்டியபோது குறைந்தது ஏழுபேராவது குமரி மாவட்டத்தவர் எனபது தெரிந்தது. சுந்தர ராமசாமி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், தோப்பில் மீரான் போன்ற எனக்குக் கொஞ்சம் அறிமுகமானப் பெயர்களைத் தவிர நான் அதுவரை அறிந்திராத சிலரும் அப்பட்டியலில் இருந்தார்கள். தமிழக மக்கட்தொகையில் இரண்டு விழுக்காடே உள்ள, மலையாளிகளென முத்திரையிடப்பட்ட இந்த மாவட்டத்தினர் மத்தியில் ஒப்புநோக்க இத்தனை அங்கீகரிக்கப்பட்ட தமிழ் எழுத்தாளர்கள் இருப்பது கொஞ்சம் வியப்பை ஏற்படுத்தியது.

உண்மையில் இதில் ஆச்சரியம் ஏதும் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். குமரி மாவட்டம் கல்வியறிவில் தமிழகத்திலேயே முதலாவதாக இருப்பது எங்கள் ஊர்காரர்கள் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தம்பட்டம் அடிக்கும் ஒரு விஷயம். இதன் பின்னுள்ள காரணங்களும் ஏற்கனவே நன்கு அறியப்பட்டவை தான். மிகக் கடுமையான சமூக அடக்குமுறைகளையும், அவற்றுக்கெதிரான சமூக இயக்கங்களையும் நேரடிப் போராட்டங்களையும் கண்ட மாவட்டம் என்பதால் இங்கே பொதுவாக விழிப்புணர்வு சற்று அதிகம். அடித்தட்டு மக்களிடம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்ததில் பொதுவுடைமைக் கட்சிகளுக்கு நிறைய பங்கு உண்டு. முற்போக்குச் சிந்தனையுடைய சில திருவிதாங்கூர் அரசர்களையும் / அரசிகளையும் காரணமாகச் சொல்லலாம். மாவட்டமெங்கும் நிறைந்துள்ள கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களுக்கும் கல்வி வளர்ச்சியில், குறிப்பாக பெண்கள் கல்வியில், முக்கிய பங்கு உண்டு.

குமரிமாவட்டத்தில் கல்வியும் இலக்கியமும் செழிக்கிறதென்றால் அதற்கு மேற்படி காரணங்களுக்கு நிகரான இன்னொன்று இங்குள்ள செழிப்பான நிலப்பரப்பு என்று எனக்குத் தோன்றுகிறது. மதுரையிலிருந்து நாகர்கோவிலை நோக்கி பேருந்தில் பயணம் செய்யும்போது முதல் நான்கு மணி நேரங்களுக்கு காணக் கிட்டும் வறண்ட வானம் பார்த்த பூமியில் ஆங்காங்கே சில ஒற்றைப் பனைகளையும் முட்செடிகளையும் தவிர்த்து வேறு தாவரங்களையோ நீர்நிலைகளையோ காண்பது அரிது. ஆனால் குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி கணவாயைத் தாண்டியவுடன் வயல்கள், வாழைமரங்கள், குளங்கள் என திடீரென நிலக்காட்சியில் ஏற்படும் மாற்றம் பிரமிப்பூட்டக்கூடியது. குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் என்று நால்வகை நிலங்களும் குமரி மாவட்டத்தில் உண்டு. செழிப்பான நிலத்தில் தான் கலையும் நாகரிகமும் வளரும் என்று படிப்பித்த நதிக்கரை நாகரிகம் பற்றிய பள்ளிப்பாடம் நினைவுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் இலக்கியத்திலும், இசையிலும் ஏனையக் கலைகளிலும் சாதனைப் புரிந்தவர்களில் ஒப்புநோக்க அதிகமானவர்கள் காவிரிக்கரைக்காரர்கள் என்பது கவனிக்கக்கூடியதாக இருக்கிறது.

31 மறுமொழிகள்:

குமரி மாவட்டம் பற்றி நல்லதொரு பதிவு. அவரவர்க்கு அவரவர் ஊர் சொர்க்கமே :-).

அதகளமான ஆரம்பம். நாகர்கோவில் தமிழை நக்கலடிக்காத கல்லூரிகள் குறைவு.

நன்றி டிசே & பாலா.

நல்ல கட்டுரை . வருக தமிழ்மணத்திற்கு

பள்ளிவயதில் இந்த பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதை உணரமுடிகிறது.

கோவையிலிருந்து நான் வேலைக்காக சென்னை சென்று பலவேறு தமிழ்களைக் கேட்கும் போது கிண்டல் அடித்தாலும்/அடிக்கப்பட்டாலும் அது ஒரு சுவையான நினைவுகளாகவே இருக்கிறது. தமிழில் 'ங்' கை அதிகமாக உபயோகிப்பதில் ஒரு பெருமையும் இருக்கிறது :-)

நல்ல பதிவு.. தகவல்கள்.

வாழ்த்துக்கள்
சுகா

அருமை..

முத்து, சுகா, ப்ரகாஷ்,

வருகைக்கும் நல்வார்த்தைகளுக்கும் நன்றி. இந்த இடுகையை கில்லி தளத்தில் பரிந்துரைத்த நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.

நானும் ஒருமுறை திருச்சியிலிருந்து ரயிலில் நாகர்கோயிலுக்கு வந்துள்ளேன். அழகான பிரதேசங்களில் பயணிக்கும் ரயில்.

நல்லாருக்குங்க உங்க கட்டுரை. வெகு சுவாரஸ்யமான எழுத்து.

அருமையான கட்டுரை. இன்னும் தொடருங்கள்.

Testing some features in the new Blogger.

Again

ஓ! நம்மூர் காரரா நீங்க .நம்ம மாவட்டம் கலையில் சிறந்த மாவட்டமய்யா! கலைவாணரும் ,கவிமணியும் ,அவ்வை சண்முகமும் நம்மூரு தானே!

ஜெகத் குமரிமாவட்டமா உங்கள் சொந்த இடம்? :))

நல்ல கட்டுரை.

பதிவின் உள்ளடக்கம் குமரிக்காரர்கள் ஒவ்வொருவரும் உணர்கிற ஒன்றுதான். தெளிவான வெளிப்பாடு.

உங்கள் பதிவின் பின்னூட்டப் பெட்டியில் சில பெயர்கள் குழம்பியும், சில ஒழுங்காகவும் இருக்கிறதே? ஏன்?

ஜோ / திரு,

ஆமாம், எனக்கு குமரி மாவட்டம் தான். சொந்த ஊர் குலசேகரம் பக்கம். ஆனால் என் சிறு வயதிலேயே நாகர்கோவிலுக்குக் குடிபெயர்ந்து விட்டோம்.

சிந்தாநதி,

மலைநாடான் பதிவில் உங்கள் செவ்வியைக் கேட்டுவிட்டு முதலில் உங்களை ஈழத்தமிழர் என்று நினைத்தேன். பிறகு அப்படி இல்லை என்றுத் தெரிந்ததும் குமரி மாவட்டத்தவராக இருக்க வாய்ப்பு அதிகம் என்றுத் தோன்றியது :-))

குழப்பமாகத் தெரியும் பின்னூட்டங்கள் நான் புது ப்ளாகருக்கு மாறுவதற்கு முன் இடப்பட்டவை. மாற்றத்தின் போது இப்படி ஆகிவிடும். பதிவிலும் இப்படித் தான் தெரியும் என்றாலும் அதை சரி செய்துவிடலாம். ஆனால் பின்னூட்டங்களை உள்ளிடும் பக்கம் நம் கட்டுப்பாட்டில் இல்லை.

அட... நாகர்கோவில் இலக்கியவாதிகள் பட்டியல்ல என்னைச் சேக்க மாட்டீங்களாக்கும் :))

ஜெகத்,
மிகவும் அருமையான பதிவு. மிகவும் சுவரசியமாகச் சொல்லியுள்ளீர்கள்.
நன்றாக இரசித்துப் படித்தேன்.

/*தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்குப் படிக்கவோ வேலைக்காகவோ போகும் குமரிமாவட்டத்துக்காரர்கள் 'மலையாளிகள்' என முத்திரைக் குத்தப்படுவது வெகு சகஜம். */

நான் இதுவரை தமிழகத்திற்கு வந்ததில்லை. ஆனால் ஈழத்தவர்களையும் பல சென்னைவாசிகள் மலையாளிகள் என்று சொல்வதுண்டாம், எமது பேச்சு வழக்கை வைத்து.

/*சென்னைக்காரர்கள் பேசுவதைவிட குமரி மாவட்டத்தவர் தமிழை சரியாகவே பேசுகிறார்கள் என்றும் பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள பல சொற்கள் எங்கள் அன்றாட பேச்சுவழக்கில் இருப்பதையும் சுட்டிக்காட்ட நான் மேற்கொண்ட முயற்சிகள் */

உண்மை. ஈழத்தில் இன்றும் புழங்கும் பல பழங்காலச் சொற்கள் இன்றும் குமரி மாவட்டப் பகுதிகளில் புழக்கத்தில் இருப்தை அறிந்திருக்கிறேன்.

/*ஒரு சக மாணவனிடம் "கொஞ்சம் நீங்கு" என்றதும், அவன் சற்று நேரம் மலங்க மலங்க விழித்துவிட்டு "ஓ, மூவ் பண்ண சொல்றியா?" என்று 'தமிழில்' திருப்பிக் கேட்டதும் இன்றும் நினைவிருக்கிறது. */

ஹிஹிஹி... இது நல்ல பகிடி[தமாஷ்].

ஜெகத், நல்ல ஜனரஞ்சமான பதிவு இது. இது போல இன்னும் எழுதுங்கள்.

ஜெகத்,

நல்ல சித்தரிப்பு. நாகர் கோவில், பணகுடி, வள்ளியூர், திருநெல்வேலி, தூத்துக்குடி என பல பகுதிகளில் வசித்துள்ள எனக்கு சென்னை வந்தவுடன் முதலில் ஒரு கலாச்சார அதிர்ச்சிதான். நல்ல வேளையாக நான் தங்கியிருந்த விடுதியில் திருநெல்வேலி மாணவர்கள் சிலர் இருந்ததால் அவர்களுடன் சேர்ந்து கொண்டு முதலில் கேலி செய்த சென்னை மாணவர்களையெல்லாம், "ஏமுல, என்னல" பாசை பேசி வெறுப்பேத்துவதுண்டு. என்னைப் போன்ற நெல்லை மாவட்டத்தினருக்கே இது பிரச்னையென்றால், குமரி மாவட்டத்தினரைக் கேட்கவே வேண்டாம். நெல்லை மாவட்டத்தினரே அவர்களை சில நேரங்களில் கிண்டல் செய்வதுண்டு. ஆனாலும் நீங்கள் சொல்வது உண்மை. குமரி மாவட்டத்தவர் நல்ல தமிழில் பேசுவது மட்டுமல்லாமல் பல அரிய இலக்கிய வார்த்தைகளை பேச்சு வழக்கில் பயன்படுத்துவதுண்டு.

சிறுவனாக இருக்கும் பொழுது அப்பாவின் பணி நிமித்தம் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கிராமங்களுக்கோ, சிறு நகரத்துக்கோ இடம் பெயரும் பொழுது பள்ளிக்கூடங்களில் சில மாதங்களுக்கு அவஸ்தைதான். பேச்சு வழக்கினால் அன்னியனாக நடத்தப் படுவதுண்டு.

நெல்லை - குமரி மாவட்டத்துக்குள்ளேயே இந்தப் பிரச்னைகள் உண்டு. குறிப்பாக கோவில் பட்டி, எட்டயபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ஓட்டப் பிடாரம், திருச்செந்தூர், திசையன் விளை, பணகுடி, நாகர் கோவில் என ஒவ்வொரு ஊரிலும் ஒரு பேச்சு வழக்கு உண்டு. ஆனால் சென்னை வந்து பின் அமெரிக்கா வந்த பின் எல்லா வ்ழக்குகளும் மறைந்து "பண்ணு" வழக்குத் தொத்திக் கொண்டு விட்டது )-: ஆனாலும் விடுமுறைக்கு ஊருக்குப் போகும் பொழுது அந்த வழக்கு தானாக வந்து விடுகிறது.

மிக நயமாக எழுதுகிறீர்கள்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

Very good. same like my experiences.

today only i red you.

thanks

மிக அழகான பதிவு. நான் நாகர்கோவில் வரவில்லை. இருந்தாலும் தொலைவில் இருந்து நாகர்கோவிலைப் பார்த்த மகிழ்ச்சி. தமிழka நண்பர்கள்
தங்கள் சிறிய ஊர்கள் குறித்து எழுதினால் மிக நன்றாக இருக்கும்.

ஒரு ஈழத் தமிழன்.

வழக்கம் போல் அருமையான பதிவு

உஸ்தாதுகள் >> கொம்பர்கள்

I read my own expieriences ...

It was great !!!

I felt like reading my own expiriences ....

that tooo boasting KK as the highly literature rate one is superb ... i always do the same ...

It was great !!!!!!!!!!!

I felt like reading my own expieriences ....

That too ..boasting about KK being the high literature district in tamilnadu is superb ... i used to tell it 1st in india :-)))))

It was great !!!!!!!

நீங்கள் பட்டியலிட்ட நபர்கள் அனைவருக்கும் சேர்த்து, எங்கள் பதில் "புதுமைப் பித்தன்"!!!

சேவியர் அவர்களைச் சேர்த்தால்....பிரசன்னா என்று ஒருவர் இங்கிருக்கிறார். அவரைச் சொல்லுவோம்

:-))

//தமிழ்நாட்டில் இலக்கியத்திலும், இசையிலும் ஏனையக் கலைகளிலும் சாதனைப் புரிந்தவர்களில் ஒப்புநோக்க அதிகமானவர்கள் காவிரிக்கரைக்காரர்கள் என்பது கவனிக்கக்கூடியதாக இருக்கிறது//


சரியான பதிவு. இப்பதிவில் மிகச் சரியான சொற்கள் இறுதிச் சொற்றொடரில் உள்ளவைதாம்.

நன்றி!

நேசமணி என்ற குமரி மாவட்டத்துக்காரர் எனக்கு கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார். உண்மையிலேயே அவர் பேசுவது மலையாளம் மாதிரித்தான் இருக்கும். சொல்லப்போனால் சில மலையாளி பேராசிரியர்கள் அவரைவிட நன்றாக தமிழ் பேசினார்கள். ஜெயமோகனின் முதல் நாவலான 'ரப்பர்' படித்தீர்களா? மலையாள நாவல் படிக்கும் உணர்வை ஏற்படுத்தும்.

என்னவே...

என்.ஸ்.கே, செய்குத்தம்பி பாவலர், புதுமைப் பித்தன், பொன்னீலன், இவியெல்லாம் எங்கே?...

கதிரு

ஓ! நம்மூர் காரரா நீங்க


வாழ்த்துக்கள்

Panakkudi & panakkudi yai thandi sellumpothe antha kulirchiyai unaramudiyum

mtDt vd;dTk; Ngrpz;L Nghl;Lk;. ehk; vJf;F Xa; ek;k gof;fj;j tplZk;. Nfyp NgRwtDtSf;F ,q;f te;J ghj;jhy;yh ek;k CU mUik njhpAk;.
vd;d nrhy;Yjpa?

M. Edmand Newman
Nagercoil